Wednesday, 31 January 2018

நாட்டின் நிலை!

இன்றைய சிந்தனை!
#############
பாரதியார், வ.உ.சி. காமராஜர்,முத்துராமலிங்கத்தேவர், அம்பேத்கார் போன்ற பெரிய தலைவர்கள். எல்லாம் குடியைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. என்ன காரணம்? அப்போது குடிப்பது மிகவும் கேவலமான செயல் என்ற எண்ணமும்,குடிப்பவனை மனிதனாக எவனும் மதிக்காத நிலையும் இருந்தது. அதனால் அவர்கள் அது பற்றி எதுவும் சொல்ல வில்லை!
ஆனால் ஆளும்  கட்சிகள் அனைத்தையும் உடைத்து வருமானம் ஒன்றையே குறிக் கோளாக கொண்டு டாஸ்மாக் கடைகளை தெருவெங்கும் திறந்துவிட்டு தொழிலாளிகள் இளைஞர் இளைஞ்சிகள்,,மாணவ,மாணவிகள் என்று அனைத்து தரப்பினரையும் குடிக்க பழக்கி விட்டது.அரசாங்கமே கடைகளை திறந்து விற்பதால் குடிப்பதை கேவலமாக நினைக்கும் எண்ணம் மறைந்து அது கவுரச்செயல் போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி விட்டது.அரசாங்கம் வேலை வாய்ப்பை பெருக்க வேண்டும்,மக்களின் வருமானத்தை  பெருக்கி வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும். அனைவருக்கும் இலவச கல்வியை வழங்கவேண்டும் .குடிப்பவனை  திருத்த வேண்டும்.
ஆனால் இங்கு அரசே குடிக்கச் செய்து வருமானத்தை பெருக்குகிறது் அதை இலவசங்களாக மக்களுக்கு கொடுக்கிறது. மக்களும் அதை பெற்றுக் கொண்டு ஓட்டு போடுகிறார்கள். வருமானம் இல்லாத போது குடிக்க பழகியவனால் நிறுத்த முடிய வில்லை.எனவே தவறான வழிகளில் சம்பாதிக்க முனைகிறான் இப்படியே சுழற்சியாக நடந்து கொண்டிருந்தால் வருங்கால சமுதாயம் என்னவாகும்.? பெருமைக் குறிய தமிழ்ச் சமுதாயம் அழிந்துவிடக் கூடும்.
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என மேடைகளில் கேட்டு புழகாகிதம் அடைந்தோம் .கல் தோன்றி மண்தோன்றா காலத்தே  மூத்த குடி என்று வீர வசனம் பேசி காலத்தை போக்கினோம். ஆனால் இன்றைய நிலை என்ன? தமிழர்களும் எடுத்தேறி போக வேண்டிய நிலை வந்து விடக் கூடாது.அறிஞர்களும் இளைஞர்களும் சிந்திக்க வேண்டும்.

No comments:

Post a Comment