Thursday, 11 January 2018

இறைவன் மீது நம்பிக்கை,!

சுகி சிவம் பேச்சில் கேட்டது!
#####################
ஒரு மனிதர் தனது மெடிக்கல்  ரிப்போர்ட்டை டாக்டர் ஒருவரிடம் காட்டினார். அந்த ரிப்போர்ட்டை பார்த்த டாக்டர் அதிர்ச்சி அடைந்தார்.ஏனெனில் அந்த ரிப்போர்ட்டில் சுகர்,உப்பு, பி்பி எல்லாமே மிக அதிகமாக இருந்தது. எனவே அவர் ஒரு வாரத்திற்கு மேல் உயிரோடு இருக்க முடியாது. இதை அவரிடம் எப்படி சொல்ல ? டாக்டர் யோசித்து இப்படி கேட்டார்.இந்த மூன்றும் உங்களுக்கு எவ்வளவு நாளாக இருக்கிறது?
அவர் சொன்னார். முப்பது வருஷமா இருக்கு டாக்டர்.
நான் ராணுவத்தில் இருந்தேன். அங்குள்ள டாக்டர் என்னை செக்கப்  பண்ணி நீ இரண்டு வருஷத்துக்கு மேல் உயிரோடு இருக்க மாட்டாய். அதனால் உன்னை ராணுவத்தில்இருந்து விடுவிக்க எழுதி கொடுக்கிறேன் அந்த இரண்டு வருஷமாவது குடும்பத்தோடு இரு என்று சொன்னார். நானும் சரி என்று வந்து விட்டேன். 2வருஷம் கழிச்சு அந்த டாக்டர் பார்க்கப் போனேன். ஆனால் இவர் இறந்து விட்டார் எனத் தெரிந்தது.
அதன்பிறகு சில காலம் கழித்து வேறொரு டாக்டரை பார்த்தேன். அவரும் நீ இன்னும் ஒரு வருஷம்தான் இருப்பாய் என்றார். நானும்சரி என்று வந்து விட்டேன். ஒரு வருஷம் கழிச்சு அந்த டாக்டர் பார்க்க போனேன் . அவரும் இறந்து விட்டார்.என்று தெரிந்தது.
இப்போ உங்ககிட்ட காட்ட வந்திருக்கேன் என்றார்.
டாக்டருக்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை. சார்.உங்களுக்கு இவ்வளவு மாதம், வருடம்னு நான் சொல்ல  மாட்டேன் .
ஆனா மெடிக்கல்  ரிப்போர்ட்படி அப்படித்தான் இருக்கு. சுகர்,உப்பு,பி.பி. மூன்றும் அளவுக்கதிகமா இருக்கு.அதோட இத்தனை நாள் எப்படி இருக்கீங்க அந்த ரகசியத்தை மட்டும் தயவு செய்து என்னிடம் சொல்லுங்க என்றார். ஒரு
டாக்டருக்கும் ஒண்ணும் தெரியாது. எனக்கு எந்த வியாதியும் இல்லை.இறைவன் என்னோடு இருக்கிறார் என்று தினமும் நினைக்கிறேன் டாக்டர் என்றார்.
************************
இதைக்கேட்டதும்
எனக்கு மருத்துவமனை ஒன்றில் எழுதி இருந்த வாசகம் நினைவுக்கு வந்தது.
மருந்து கொடுப்பது மருத்துவர் பணி!
ஆரோக்கியம் அளிப்பது ஆண்டவன் அருள்!
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

No comments:

Post a Comment