சாதனையாளர் விருது
தமிழ்நாடு அரசு மூத்தகுடிமக்கள் மற்றும் பென்சனர்கள் நல உரிமைச் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்ட செயலாளராக இருக்கிறேன் ,மூத்த குடிமகன்களுக்காக சிறந்த சேவை செய்தமைக்காக எனக்கு மாநில அளவில் சிறந்த சாதனையாளருக்கான விருது வழங்கப்பட்டது.அதை குடியரசு தினவிழாவில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்!Sunday, 22 February 2015
Sunday, 8 February 2015
புளியரை அ/மி தட்சிணாமூர்த்தி தரிசனம்
செங்கோட்டை தாலுகா புளியரை அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத அ/மி சதாசிவ மூர்த்தி திருக்கோவில் தைத் திருக்கல்யாணத் திருவிழாவின் முதல் நாள் நானும் திரு உ.சிதம்பரபாண்டியன், கவிஞர் கோ.கணபதிசுப்பிரமணியன் மற்றும் சில அன்பர்களும் சென்று தரிசனம் செய்தோம்!
மற்ற சிவன் ஆலயங்களில் மூல ஸ்தானத்திற்கு தென் பக்க சுவரில் தட்சிணாமூர்த்தி இருப்பார்!ஆனால் இந்தக்கோவிலில் மூலமூர்த்திக்கும் நந்திக்கும் மத்தியில் தனிக்கோவில் கொண்டு அருள் பாலிக்கிறார்!இருபத்தியேழு நட்சத்திரங்களுக்கும் இங்கு பரிகாரம் காணலாம்!கோவில் ஏறுவதற்கு இருபத்தியேழு படிக்கட்டுகள் அமைந்திருக்கின்றன!
எந்த ஜாதிக தோசம் உள்ளவர்களும் 27 படிக்கட்டுகளில் ஏறிச் சென்றுதட்சிணாமூர்த்தியை தரிசித்தால் எல்லா தோசங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.64 சிவதிருமேனிகளுள் ஓன்று தட்சிணாமூர்த்தி யாகும்! பஞ்ச குண சிவ மூர்த்திகளுள் தட்சிணாமூர்த்தி சாந்த மூர்த்தியாகும்!
சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவம் கொண்டு சின் முத்திரை காட்டி உபதேசம் செய்கிறார்!சின் முத்திரை!ஞானத்தின் அடையாளம்.பெருவிரலின் அடிப்பாகத்தைசுண்டுவிரல் தொடவும் ஏனைய விரல்கள் விலகிநிற்கும் முத்திரை இது! உயிரானது மும்மலங்களில் இருந்து நீங்கி இறைவன் திருவடியைஅடைந்துஇன்புறுவதே இம்முத்திரையின் தத்துவமாகும்!
டவுண்பஸ் வசதி இருக்கிறது!விரும்புகிறவர்கள் தரிசித்து வருக!!

Subscribe to:
Comments (Atom)