Tuesday, 31 January 2017

திரிசங்கு நிலமை!

மூன்று மூன்றாய்
உலகில் மூன்றுக்கு மிகவும் மதிப்பு .முப்பெரும் தேவி ,முக்கண்ணன் ,என்று பல உதாரணங்கள்  சொல்லலாம் .அதே போல மனிதர்களிலும்  மூன்று வகை உண்டு !பணக்காரர்கள் ஒரு வகை! .ஏழைகள்  இரண்டாவது வகை ! இரண்டிற்கும் நடுவில் உள்ளவர்கள்தா ன் நடுத்தர வர்க்கத்தினர் !இவர்கள் அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் திரிசங்கு சொர்க்கத்தில்  இருப்பவர்கள் .அரசாங்க நடவடிக்கைகள் முழுதும் இவர்கள் தலையில் தான் விடியும் .விலை உயர்வு ,மின் கட்டண உயர்வு எல்லாம் இவர்களை பாடாய் படித்தும் .பணக்காரர்கள் எதையும் சமாளித்துக் கொள்வார்கள் ! ஏழைகள் எப்போதும் பிளாட் பாரம் தான் .ஆனால் நடுத்தர வர்க்கத்தினர் தான் இரண்டும் கெட்டானாய் தவிப்பார்கள் .சொந்த வீட்டுக் கடன் ,பிள்ளைகள் படிப்பு கடன் பெண் பிழைகள் கல்யாணக் கடன் என்று கடன் என்ற கடலிலேயே கப்பல் விட வேண்டும் .
ஆகவே எந்த சட்ட திட்டமும் நடுத்தர வர்க்கத்தினரைத்தான் முதலில் பாதிக்கும்?