Thursday, 26 May 2016

பெண்மையை பெருமைப் படுத்துவோம்!


 மேலே  கண்டது  நகைச்சுவையோடு  சேர்த்தியா ?அதோடு   ஊடகங்களிலும்  பத்திரிக்கைகளிலும் வீட்டு வேலைக்கு  வரும்  பெண்களை  விலை மாதர்  போல  சித்தரிக்கிறார்கள் !  அதோடு  ஆண்கள் அனைவரையும்  சபல புத்திக்காரர்களாக சித்தரிக்கிறார்கள். இதை  யாரும் கண்டிப்பதில்லை.  மாதர் சங்கங்களும்  சுட்டிக் காட்டுவதில்லை .ஒரு அறிக்கை கூட விடுவதில்லை .
  ஒரு பெண் குடும்ப கஷ்டம் காரணமாக  வீட்டு வேலைக்கு போனால் அந்த வீட்டுக்காரரோடு  உறவாடி விடுவாளா ?இனியாவது  வீட்டு வேலைக்கு போகும் பெண்களை கேவலமாக எழுதாமல் இருப்போமாக !நகைச்சுவை என்பது பிறர் மனம்  புண் படாமல் சிந்தனையை  தூண்டுவதாக  இருக்கும் படி  அமையட்டும் ! ( படங்கள் : கூகுள் ) 

Sunday, 1 May 2016

அ/மி தம்புராட்டி அம்மன் மற்றும் அ/மி ராஜா r

திருநெல்வேலி  மாவட்டம் வ்வீரகேரளம்புதூர்   தாலுகாவில் உள்ள சுரண்டையில்  எங்களது  குலதெய்வம் கோயில் இருக்கிறது.    தம்புராட்டி அம்மன் மற்றும் ராஜ ராஜேஸ்வரி அம்மன்  கோயில் இருக்கிறது . நாங்கள்  ராஜராஜேஸ்வரி யையும்  சிலர்  தபுராட்டி யையும் குலதெய்வமாக வணங்கி வருகிறார்கள் .!ஆனால் பூஜை செய்யும்போது எல்லாவற்றிற்கும் ஓன்று போல் அபிசேகங்கள் அலங்காரங்கள் எல்லாம் செய்வோம் !அங்கு ராஜ கணபதி சதாசிவம் மூர்த்தி ,சப்த கன்னிகைகள்  பைரவர் மாடன் மாடத்தி த ஆகிய தெய்வங்களும் உள்ளன

ராஜ கணபதி 
 ராஜராஜேஸ்வரி அம்பாள் 

                                                      தம்புராட்டி அம்பாள

                                             சப்த கன்னிகைகள் 
                 
                                              மாடன் மாடத்தி

Saturday, 16 April 2016

நாதஸ்வரம் மங்கல இசை!

            
                வெடிச்சத்தமும் மேளச்சத்தமும்
     சென்ற  வாரம் கேரளாவில் ஒரு கோயில் விழாவில் வெடி வெடித்ததில்  விபத்து ஏற்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்ததையும் அநேகர் படு  காயம் அடைந்ததையும் கேள்வி பட்டு இந்த நாடே  அதிர்ச்சி அடைந்தது .ஆனால்  நாம் அந்த நேரத்தில் அப்படி செய்யக்கூடாது இப்படி செய்யக்கூடாது  என்று சொல்லுகிறோமே தவிர  சிறிது நாளில் அதை  அறவே மறந்து விடுகிறோம் .இது நம் நாட்டின்  சாபக்கேடு! .
       இதே போல  திருமண  மண்டபங்களிலும் நடை பெறுகிறது ! தமிழ் நாட்டில் திருமண மண்டபம் முழுவதும் ஊருக்குள் தான் இருக்கின்றன !மண்டபத்தை சுற்றிலும் வீடுகள் இருக்கின்றன !
     இவைகளை கவனத்தில் கொள்ளாமல் திருமணத்தில்  அதிக சத்தத்துடன்  வெடிகளை  வெடிக்கிறார்கள்! .மண்டப வாசலில் வைத்து செண்டை மேளம்  அடிக்கிறார்கள் !நாதஸ்வர மேளத்திற்கும் செண்டை மேளத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது !செண்டை மேளத்தை அதிக சத்தத்துடன் அடிப்பதால் பக்கத்து வீடுகளில் உள்ள பச்சை குழந்தைகளும், படிக்கும் பிள்ளைகளும், வயதான முதியவர்களும் படும் பாடு மிகவும் பரிதாபம் !
     தூங்கும்  குழந்தைகள் இந்த சத்தத்தில் பதறி எழுந்து அழுவது மிகவும் கொடுமை !செண்டை மேள சத்தத்தில் படிக்க முடியாமல் பிள்ளைகள்  கலங்குகிறார்கள் ! வயதானவர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம் !நெஞ்சில் அறைவது போன்ற அந்த சத்தத்தால் அவைகள் பாடு மிகவும் அவஸ்தை !
                    
     திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று சொல்லுவார்கள் ! எல்லோருடைய வாழ்த்துக்களையும் பெற வேண்டும் ! பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு துன்பத்தை கொடுத்து இன்புற வேண்டாமே !
   மண்டபத்தை வாடகைக்கு விடுபவர்களும் திருமண வீட்டாரும் சிந்திப்பார்களாக !!