Saturday, 26 September 2015
Wednesday, 16 September 2015
அந்தக் கால நினைவுகள் ! படித்த ஞாபகம் !
முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மனைவி லலிதா சாஸ்திரி !இவர் கவிஞரும் கூட !இவருடைய பக்தி பாடல்களை AVM கொலம்பியா இசைத்தட்டாக சரஸ்வதி ஸ்டோர்ஸ் மூலம் வெளியிடப்பட்டது! லதா மங்கேஸ்கர் இனிய குரலில் பாடி இருந்தார் !
ஏ.வி,எம் மின் மகள் வெற்றிலை பூ பழங்கள் இவைகளுடன் அழகிய பட்டுப் புடவை ஒன்றையும் ஒரு பெரிய தட்டில் வைத்து அதனுடன் இசைத்தட்டையும்வைத்து சாஸ்திரயின் மனைவியைச் சந்தித்து கொடுத்து விட்டு வந்தார் !
ஏ.வி.எம்மின் மகள் தம் இருப்பிடம் வந்தபோது சாஸ்திரியின் உதவியாளர் பட்டுப்புடவையுடன் காத்திருந்தார் !"நான் பிரதமரின் மனைவி என்பதால் இதை பெறுவது முறையாக இருக்காது !உடனே மறுத்தால் மனம் வருந்துவீர்கள் என்பதால் இப்போது அனுப்பி உள்ளேன் !"என்று கூறி விட்டுருந்தார் !இப்படியும் இருந்திருக்கிறார்கள் !
Monday, 14 September 2015
அந்தக்கால நினைவுகள் படித்த ஞாபகம் !
ஜகத்குரு
காஞ்சி பெரியவர் படத்தை பத்திரிக்கையில் ஒரு ஜெர்மன் அறிஞர் பார்த்தார் !ஒரு பரமாச்சாரியார் இவ்வளவு எளிமையாக இருக்கிறாரே !அவரை கட்டாயம் போய் பார்க்கவேண்டும் ! அவரை வணங்க வேண்டும் என்று தீர்மானம் பண்ணினார் !திருநெல்வேலி பக்கத்தில் ஒரு கிராமத்தில் பெரியவர் இருந்தார் ! அவரை வரவேற்று கிராமம் முழுதும் ஜகத்குருவே வருக வருக என்று எழுதப்பட்டிருந்தது !ஜெர்மன் அறிஞர் பெரியவரை பார்த்தார் ! வணங்கினார் !பின்பு பெரியவரை பார்த்து "நீங்கள் ஒரு மதத்திற்கு மட்டும் தானே குரு !அப்படி இருக்கும் பொது எல்லோருக்குமே குருஎன்கிற அர்த்தத்தில் ஜகத்குரு என்று போட்டிருக்கிறதே" ! என்று கேட்டார் ! பெரியவர் சிரிக்கிறார் !ஓ .. இப்படி ஒரு அர்த்தம் இருக்கிறது எனக்கு இதுவரைக்கும் தெரியாமபோயிட்டுது !நான் வந்து ஜகத்குரு அதாவது ஜகத்தில் உள்ள எல்லா ஜந்துக்களையும் நான் குருவாக நினைச்சு வணங்குறேன் ! அவற்றிலே இருந்து நான் எத்தனையோ பாடங்கள் இன்னமும் கற்றுக்கொண்டு இருக்கிறேன் !அதாவது இந்த அகிலமே நமக்கு குரு!என்று கூறினாராம் !
Sunday, 13 September 2015
ஜோதிடம் ஒரு சாகரம்
ஒரு தடவை என் நண்பரின் மனைவி பெண் ஜோதிடர் ஒருவரிடம் தன் ஜாதகத்தை காட்டி இருக்கிறார் ! அவர் இன்னும் கொஞ்ச நாள்தான் உங்களுக்கு இருக்கிறது !எனவே உங்கள் பிள்ளைகளுக்கு எழுதி வைக்க வேண்டியதை எழுதி வைத்து விடுங்கள் என்று கூறி இருக்கிறார் !இதை கேட்டதும் நண்பவரின் மனைவி அழுத கண்ணும் வீங்கிய முகமுமாக வீட்டில் வந்து படுத்து விட்டார் ! என் நண்பர் வந்து பார்த்து விவரம் கேட்டிருக்கிறார் !அவர் மனைவி முழுவதையும் சொல்லி இருக்கிறார் !
நண்பன் கவலையோடு என்னிடம் சொன்னார் ! நான் அவர்கள் இருவரையும் எனக்கு தெரிந்த பெரிய ஜோதிடரிடம் அழைத்துச் சென்றேன் !அவர் அந்த அம்மாவின் ஜாதகம் முழுவதையும் அலசி ஆராய்ந்து பார்த்து விட்டு இந்த அம்மாளுக்கு ஆயுசு கெட்டி ! 90 வயசு வரைக்கும் இருப்பார் ~ கவலையே வேண்டாம் என்று கூறி அதற்கான விளக்கங்களையும் பல புத்தகங்களை வைத்து மேற்கோள் காட்டி எடுத்துக் கூறினார் ! அதோடு இது போன்று அரை குறை ஜோசியரிடம் ஜாதகத்தை காட்டாதீர்கள் என்றும் கூறினார் ! அதன் பிறகுதான் அந்த அம்மாவின் முகத்தில் களை வந்தது !பிரிதொரு நண்பருக்கு நிகழ்ந்த அனுபவம் வேறு மாதிரி ! அவர் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார் ! முன் வாசல் கதவை தாழ்ப்பாள் போடாமல் இருந்திருக்கிறார் ! அப்போது ஆஜானுபாவான மனிதர் ஒருவர் கதவை திறந்து கொண்டு வீட்டிக்குள் வந்து விட்டார் ! நண்பர் " யார் நீங்கள் ?என்ன வேண்டும் உங்களுக்கு ? :என்று உள்ளுக்குள் பயம் இருந்தாலும் வெளிக் காட்டிக்கொள்ளாமல் கேட்டிருக்கிறார் ! அவர் நான் ஒரு ஜோசியர் ! உங்க வீட்டுப்பக்கம் வரும்போதே உங்க வீட்டுக்குள்ளே போ என்று எனக்கு அசரீரி வாக்கு கிடைத்தது ! அதான் வந்தேன் என்றார் !என்ன அசரீரி கிடைத்தது என்று நண்பர் கேட்டிருக்கிறார் ! அதற்கு வந்தவர் உங்கள் பிள்ளைக்கு கண்டம் இருக்கிறது ! அதற்கு அறுபடை முருகனுக்கு பரிகாரம் செய்ய வேண்டும் ! அதற்கு ஆறாயிரம் ரூபாய் செலவாகும் .செய்யவில்லை என்றால் உங்கள் பிள்ளைக்கு உயிருக்கு அபாயம் இருக்கிறது என்று கூறி உள்ளார் !
நண்பர் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்திருக்கிறார் ! வந்தவர்
உங்களுக்கு நம்பிக்கை இலை அல்லவா ? என்று கேட்டு ஒரு துணியை எடுத்து வாருங்கள் என்று கூறி இருக்கிறார் ! நண்பரும் ஒரு துணியை எடுத்து வந்திருக்கிறார் ! அதை பல துண்டுகளாக கிழியுங்கள் என்று ஜோசியர் கூறி இருக்கிறார் .நண்பரும் பல துண்டுகளாக கிழித்திருக்கிிறார் ! பிறகு ஜோசியர் எல்லா துண்டுகளையும் ஒன்றாக சுருட்டுங்கள் என்று கூறி உள்ளார் ! நண்பரும் எல்லா துண்டுகளையும் சுருட்டி உள்ளார் ! இப்போது விரியுங்கள் என்று ஜோசியர் கூற நண்பரும் விரித்திக்கிறார் ! கிழித்த துண்டுகள் எல்லாம் சேர்ந்து முன்பு இருந்தது போல ஒரே துணியாக வந்து விட்டது !
நண்பருக்கு வியப்பு ஒரு புறம் ! பயம் ஒரு புறம் !ஆனால் நண்பருக்கு தெளிவும் தைரியமும் வந்து விட்டது ! இவருக்கு சித்து தெரிந்திருக்கிறது ! அதை வைத்து நம்மை மிரட்டுகிறார் ! இவரிடம் இருந்து ஜாக்கிரதையாக தப்பிக்க வேண்டும் ! இல்லை என்றால் நம்மை மயக்கியோ அல்லது அடித்து போட்டு விட்டோ வீட்டில் உள்ள பணம் நகைகள் இவைகளை சுருட்டிக்கொண்டு பொய் விடக்கூடும் !என்று சினிமா படம் போல மனதில் ஓடி இருக்கிறது !
இவரிடம் சமாளிக்க வேண்டும் என்று எண்ணி என்னால் ஆறாயிரம் ரூபாய் கொடுக்க முடியாது என்று கூறி உள்ளார் ! இருவரும் பேரம் பேசிப் பேசி கடைசியில் மூன்றாயிரம் என்று முடித்திருக்கிறார் ! மூன்றாயிரம் கிடைத்து விட்டது என்று ஜோசியர் சந்தோசமாக இருக்க நண்பர் பணத்தை எடுத்து வருகிறேன் என்று கூறி உள்ளே போய் உள் கதவை தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார் ! பின்பு பக்கத்து வீட்டு காரர்களை சத்தம் போட்டு கூப்பிட அவர்கள் வருவதற்குள் ஜோசியர் எழுந்து ஓடி விட்டார் !நண்பரின் சமயோசிதத்தை எல்லோரும் பாராட்டினார்கள் !
அந்தக்கால நினைவுகள் !
நேருவும் காமராஜரும் டில்லியில் நடந்த உலக கண்காட்சியை பார்க்க சென்றிருந்தனர் ! நேரு அங்கிருந்த எடை பார்க்கும் எந்திரத்தில் எடை பார்த்தார் ! அவருடன் சென்றிருந்தவர்களும் எடை பார்த்தனர் ! ஆனால் காமராஜர் மட்டும் எடை பார்க்கவில்லை ! நேரு சொல்லியும் கேட்கவில்லை ! பின் நேரு சொன்னார் !காமராஜர் ஏன் எடை பார்க்கவில்லை தெரியுமா ?இந்த எந்திரத்தில் ஏறி நின்று போடும் காசு கூட இப்பொழுது அவரிடம் இருக்காது என்றார் !பிறகு தானே காமராஜருக்கு காசு போட்டு எடை பார்த்தாராம் !
Friday, 11 September 2015
முகூர்த்த நேரம்
படம் கூகுள்
இந்துக்களின் திருமணத்தின் போது தாலி கட்டும் நேரத்தில் சொல்லப்படும் ஸ்லோகம் !மாங்கல்யம் தந்து நாநேந
மமஜீவன ஹேதுனா
கண்ட்டே பத்நாமி சுபகே
சஞ்சீவ சரதஸ் ஸதம்
இதன் பொருள் : இது புனிதமான கயிறு ! நான் நல்லபடியாக ஜீவித்திருக்க வலிமை பெற்றது ! இதை நான் உன் கழுத்தில் அணிவிக்கிறேன் ! நீ சகல
சௌபாக்யவதியாய் நூறாண்டுகள் சுக போகங்களுடன் வாழ்ந்திருப்பாயாக !
படம் கூகுள்
Subscribe to:
Comments (Atom)









