Monday, 29 June 2015

ஹோட்டலில் சுத்தம்

                                       
   திருநெல்வேலி ஜங்ஷன் ஹோட்டல் ஒன்றில் நானும் எனது நண்பரும் சாப்பிடச் சென்றோம் .தோசைக்கு ஆர்டர் கொடுத்தோம் .கொஞ்ச நேரம் கழித்து ஹனுமார் சஞ்சீவி மலையை தூக்கி வருவது போல சர்வர் இரண்டு கைகளிலும் இரண்டு பிளேட்டுகளில் தோசையை கொண்டு வந்தார்!.அது வரை சரிதான் !ஆனால் தோசையை என் முன்னால்மேஜையில் வைக்கும் போதுதான் கவனித்தேன் .சர்வருடைய பெருவிரல்கள் தோசைகள் மீது அழுத்தமாக பதிந்திருந்தது .தோசைகள் கீழே விழுந்து விடக்கூடாது அல்லவா?
 எனக்கு  கொடுத்த தோசையின் மீது அவரது இடது கை பெரு விரல் அழுத்தமாக பதிந்திருந்தது !நான் வடிவேல் ஒரு சினிமாவில் சர்வரை பார்ப்பாரே அது போல பார்த்தேன் .கட்டை விரலை தோசை மீது வைத்து வருகிறாயே என்றேன் .உணவு மீது கையே படக்கூடாது! கையில் உறை மாட்டித்தான் பரிமாற வேண்டும்.இந்த லட்சணத்தில் கையில் உறை மாட்டாததோடு அதன் மேல் பெருவிரலை வைத்து அழுத்திக் கொண்டு வருகிறார் !அதுவும் எனக்கு மட்டும் ஸ்பெஷலாக  இடது கை பெருவிரல்! எனக்கு குமட்டல் வந்தது. பிறகு முதலாளியை கூப்பிட்டு சொன்னேன் .அவர் வந்து அவனை சத்தம் போட்டு வேறு ஒரு சர்வரை கூப்பிட்டு இந்த தோசைகளை எடுத்துக்கொண்டு  போய் பெரிய தாளத்தில் தட்டுகளை வைத்து கை படாமல் வேறு தோசைகள் கொண்டுவரச்சொன்னார்!.சர்வர் எங்கள் முன்பு வைத்த தட்டுகளை எடுக்க வந்தார்.நான்  வேறு தோசைகளை கொண்டுவந்து வைத்து விட்டு இந்த தோசைகளை எடுத்து போ என்றேன் .இதே தோசையை கொண்டு போய் வேறு தட்டுகளில் வைத்து கொண்டு வந்தால் நமக்கு  எப்படி தெரியும்?அதோடு  தண்ணீர் கொண்டு வரும் போது ஒவ்வொரு கிளாசிலும் ஒவ்வொரு விரலை நுழைத்துதான் கொண்டு வருகிறார்கள் !இதை அதிகாரிகளும் கண்டு கொள்ளுவதில்லை !முதலாளிகளும் கண்டு கொள்ளுவதில்லை !நான் அந்த தண்ணீரை குடிப்பதே இல்லை !
       என்னோமோ போங்க! ஹோட்டலில் போய் சாப்பிட்டு விட்டு  வருவது பணம் கொடுத்து நோயை விலைக்கு வாங்கி வருவது போலத்தான் இருக்கிறது! என்ன செய்ய !

பன்பொழி திருமலைகுமாரசாமி கோயில்

                                            பன்பொழி திருமலை குமாரசாமி கோயில்
   எனக்கு சென்ற வாரம் பண்பொழி திருமலை குமாரசாமி கோயிலுக்கு சென்று சாமியை  தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது!  பல ஆண்டுகளாக அந்த கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று எண்ணிய போதும் அவன் அருளாலே அவன் தாள் வணங்கும் பாக்கியம் இப்போதுதான் கிடைத்தது ! அந்த கோயில் சுமார் 540 அடி உயரமுள்ள குன்றின் மீது அமைந்துள்ளது !

  தியில் இக்குன்றின்மீது ஒரு வேல் மட்டும்தான் இருந்தது .அந்த வேலை தினமும் பூவன் பட்டர் என்பவர் பூஜை செய்து வந்தார் .ஒருநாள் மதியம் அவர் புளியமரத்தடி ஒன்றில் உறங்கிக்கொண்டிருக்கும்போது  அவர் கனவில் முருகன் வந்து  சிறிது தூரத்தில் கோட்டைத் திரடு  என்ற இடத்தில் சிலை வடிவில் இருக்கிறேன் !அந்த இடத்தி எறும்புகள் சாரை சாரையாக 
செல்லும் !அந்த இடத்தில் தோண்டி பார்த்தால் நான் இருப்பேன் என்று கூறி இருக்கிறார் ! பட்டர் விழித்து எழுந்ததும் அரசரிடம் கூறி உள்ளார் .அப்போது கேரளா ஆட்சியில் இருந்தது .பந்தள மகாராஜா வந்து சிலையை எடுத்து இந்த குன்றின் மீது பிரதிஸ்டைசெய்தார் .பின்பு அருள்செல்வர் சிவகாமி அம்மையாரால் இக்கோயில் கட்டப்பட்டது .இக்கோயில் கட்டி ஐநூறு வருடங்களுக்கு மேல் ஆயிரம் வருடங்களுக்கு உட்பட்டதாக இருக்கும் என்று கருதுகிறார்கள்!
                                                             



 இந்த  மலைக்கு திரிகூட மலை என்றும் பெயர் உண்டு .இந்த முருகன் மீது பாடப்பட்ட திருமலைஆண்டவர்  குறவஞ்சி என்னும் செய்யுள் தொகுப்பை உ.வே. சாமிநாதய்யர் அவர்கள் புதிப்பித்து வெளி யிட்டுள்ளார்!திருப்புகழில் அருணகிரி நாதரும் பாடி உள்ளார் . இந்த முருகனை திருமலை முருகன் என்றும் அழைப்பர். .முன்பு இந்த மலைக்கு 625 படிகள் ஏறிச்செல்ல வேண்டும் !
  சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பாக இந்த மலையை சுற்றி சுமார் ஐந்து கோடி ரூபாய் செலவில் சுற்றுப் பதை அமைக்கபட்டுள்ளது ! அடி வாரத்தில் இருந்து குன்றின் மீது கோயில் வரை கார்,பைக் செல்ல சுற்றுப்பாதையில் நல்ல ரோடு அமைக்கப்பட்டுள்ளது . காருக்கு ஐம்பது ரூபாய் வசுலிக்கிறார்கள் . 
  இந்த கோயில் பண்பொழி என்ற ஊரில் இருக்கிறது .பைம்பொழில் என்னும் பெயர் மருவி பண்பொழி ஆகி விட்டது .தென்காசியில் இருந்து 12  கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது .
  இந்த ஊர் கேரளா பார்டரில் உள்ளது .இந்தக்கோயிலைச்சுற்றி ஐயப்பன் ஸ்தலங்களான ஆரியங்காவு  அச்சங்கோவில்  குளத்துபுழை ஆகியவைகள் உள்ளன .
  இந்த  மலையின் அடி வாரத்தில் வல்லப விநாயகர் கோயில் இருக்கிறது .மலை உச்சியில்  உச்சி பிள்ளையார் கோயில் இருக்கிறது .அதற்கு பதினாறு படிக்கட்டுகள்  உள்ளன. பதினாறு  செல்வங்களும் பதினாறு படிக்கட்டுகளாக உள்ளதாக கூறுகிறார்கள் !

.
     


மலை உச்சியில் இருந்து பார்த்தால் சுற்றிலும் பச்சைப் பசேல் என்று  மிகவும் ரம்மியமாகஇருக்கிறது !  நாங்கள்  காரின் கதவை திறக்க முடியாதபடி காற்று அவ்வளவு  வேகமாக வீசுகிறது !நடக்கும் போதே காற்று தள்ளுகிறது ! மலையில் இருந்து இறங்கவே  மனமில்லை ! அதை  வர்ணிக்க வார்தைகளில்லை !நேரில் சென்றால்தான் தெரியும்  அந்த  சுகானுபவம்!

இக்கோயில் தீர்த்தத்தை அஷ்ட பத்ம குளம் என்று

அழைத்தனர் .தற்போது பூஞ்சுனை என்று அழைன்றக்கினர் !  
                                                              

இக்கோயில் தீர்த்தத்தை அஷ்ட பத்ம குளம் என்று அழைத்தனர் . தற்போது பூஞ்சுனை என்று அழைக்கின்றனர் !இக்கோயிலில் தங்கத்தேர் உள்ளது ! இக்கோயிலில் சித்திரை வருடப்பிறப்பு,  வைகாசி விசாகம், கந்த சஷ்டி திருநாள்,கார்த்திகை திருநாள் போன்ற பல  திருநாட்கள் விசேசமாக நடக்கும்! .இங்கு ஒரு பகுதியில் இடும்பன் கோயில் இருக்கிறது .கோயிலின் உள்ளே சப்த கன்னிகைகள் உள்ளனர் .இக்கோயில் காலை  6 முதல்  மதியம்1  மணி வரையும்  பிற்பகல் மாலை 5 மணி முதல் இரவு 8.30   மணி வரையும் திறந்திருக்கும் என அறிவிக்கபட்டுள்ளது ! இக்கோயிலுக்கு வருவதற்கு தென்காசியில் இருந்தும் செங்கோட்டையில் இருந்தும் டவுன் பஸ் வசதிகள்  உள்ளன ! பக்தர்கள்  அனைவரு்ம் அங்கு சென்று அவன் தாள் வணங்கி அவன் அருள்  பெற்று வாருங்கள் ! எல்லாம் அவன் அருள் !!

                                                     




























Tuesday, 23 June 2015

ஆறை நூறாக்கு

                                               ஆறை  நூறாக்கு                          
                  எனது நண்பர் குப்பண்ணா புதிதாக மூன்று நபர்களுடன் வந்தார் .அவர்கள் மூவரும்  சென்ற மாதம் வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் என்றும் அவர்களில் ஒருவர் மகளுக்கு வரனின் ஜாதகம் கேட்க வந்திருக்கிறார்கள் என்றும் குப்பண்ணா கூறினார் ! தூத்துக்குடி உறவினர் செய்த கலாட்டாவில் இருந்து ஜாதகத்தை கொடுப்பதோடு சரி !கூடப்போய் பேசுவதெல்லாம் கிடையாது ! இவர்கள் மூவரையும் மூத்த குடி மக்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு கூட்டி வந்திருக்கிறார் ! அவர்களிடம் பெசிக்கொண்டு இருக்கும்போது அவர்களில் இருவர் சேமிப்பு  தொகையாக பல லட்சங்கள் பெற்றதாகவும் ஒருவர் மட்டும் கொஞ்ச பணமே பெற்றாகவும் கூறினர் !
   நீங்கள் மூவரும் ஓன்று போல் வேலை பார்த்தவர்கள்தானே ? அவருக்கு மட்டும் ஏன் குறைவாக பணம் கிடைத்தது ?என்று கேட்டேன் .
   அதற்கு அவர் சார் சில  வருடங்களுக்கு ஒரு முறை என் சேமிப்பில் இருந்து பணத்தை எடுத்து விடுவேன் ! அதைஅப்படியே குறைந்த விலையில் பிளாட்டுகாக வாங்கி விடுவேன் ! என் மனைவி பேருக்கும் பிள்ளைகள் பேருக்கும் வாங்கி விடுவேன் .சர்க்காரில் பெர்மிசனும் வாங்கி விடுவேன் ! இப்போது அவைகள் கோடிக்கணக்கில் மதிப்பு உள்ளதாக இருக்கிறது ! அவர்கள் சேமிப்பு பணத்தை எடுக்காமல் இருந்து என்ன பயன் ? ஆனால் நான் அதை எடுத்து முதலீடு செய்து விட்டேன் !இப்போது சொல்லுங்கள் ! யார் செய்தது சரி என்று கேட்டார் .
  எனக்கு மக்களை பெற்ற மகராசி படத்தில் வந்த பாட்டுதான் ஞாபகத்திற்கு வந்தது !
               சேத்த பணத்தை சிக்கனமா செலவு பண்ண பக்குவமா 
                அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு -அவுங்க 
                ஆறை நூறு ஆக்குவாங்க செல்லக் கண்ணு !
                இவரே ஆறை நூறா ஆக்கிட்டாரு!


Monday, 22 June 2015

நவீன நாரதர் !

           நான் காலையில் எழுந்து காப்பி குடித்து பேப்பர் படித்துமுடிக்கவும் எனது  நண்பர்  குப்பண்ணா வந்தார் .அவரும் நானும் பால்ய சிநேகிதர்கள் .இருவரும் ஓய்வு பெற்றதும்  எங்களால் முடிந்த பொது  சேவைகளை செய்து வருகிறோம் .குப்பண்ணாவிடம் ஜாதகங்கள் நிறைய வரும் .மாப்பிள்ளை ஜாதகங்கள் பெண் ஜாதகங்கள்  என்று !  அவற்றை தகுந்தவர்களிடம் கொடுத்து  கல்யாணத்தை  கூட இருந்து முடித்து வைப்பார் !பணம் எதுவும் வாங்க மாட்டார் !இலவசமாகவே செய்வார் ! பெண்ணை பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருகிறார்கள் என்றால் இவர் காசிலேயே கடிதம் எழுதுவார் !
          அன்று அவர் முகம் கொஞ்சம் வாடி இருந்தது ! என்ன குப்பண்ணா முகம் ஒரு மாதிரி இருக்கிறதே என்ன விஷயம் என்று கேட்டேன் !
         இனி ஜாதகத்தை கொடுப்பதோடு சரி !கல்யாணத்தை கூட இருந்து எல்லாம் முடிக்க கூடாது என்றார் ! ஏதாவது பிரச்சினையா? என்று கேட்டேன் வெட்டு குத்துதான் பாக்கி !மற்ற எல்லாம் நடந்து போச்சு என்றார் !
     அவராகவே சொல்லட்டும் என்று இருந்தேன் ! அவர் உறவினர் ஒருவர் தூத்துக்குடியில்இருக்கிறார் . அவர் மகளுக்கு  மாப்பிள்ளை பார்க்க டவுனுக்கு கூட்டிச்  சென்று இருக்கிறார் .மாப்பிள்ளை வீட்டில் இரண்டு பையன்களும்  மூன்று  பெண்களும் இருக்கிறார்கள் !மூன்று பெண்களுக்கும் திருமணம் ஆகி விட்டது !பையன்களில் மாப்பிள்ளைதான் மூத்தவர் !
      குப்பண்ணா கூட்டிச் சென்ற உறவினர் மாப்பிள்ளை வீட்டாரிடம்  சொத்து பத்துக்களை பற்றி விசாரித்து விட்டு உங்களுக்குள் பாகப்பிரிவினை ஆகி விட்டதா என்று கேட்டிருக்கிறார் ! அதற்கு மாப்பிள்ளையின் தகப்பனார் எல்லாம் என் சுய சம்பாத்தியம்தான்! என் இளைய மகனுக்கும் கல்யாணம் முடிந்தவுடன் உயில் எழுதி வைத்து விடுவேன் என்று கூறி இருக்கிறார் !
    அதற்கு குப்பண்ணா கூட்டிசென்ற நபர் அதெல்லாம் சரிப்பட்டு வராது !பின்னாடி பெண்கள் தகராறு செய்யும் !இப்பவே  அவர்களிடம் விடுதலை பத்திரம் எழுதி வாங்கி விடுங்கள் என்று கூறி இருக்கிறார் ! அதற்கு மாப்பிள்ளையின் அப்பா என் பெண்கள் தகராறு எல்லாம் செய்யாது  .என்  பிள்ளைகள்  நல்லவர்கள். நான் சொல்வதை கேட்பார்கள் .என்று கூறி இருக்கிறார் . பெண்ணின் தகப்பனார் பெண்கள்  நல்லவர்களாக இருக்கலாம் .ஆனால் அவர்களின் கணவர்கள் தகராறு செய்யலாம். அல்லது  மாப்பிள்ளை மார்களின் பெற்றோர் தகராறு செய்யலாம் .ஆகவே  எல்லோரையும் கூட்டி வைத்து பேசி விடுதலை பத்திரம் எழுதி வாங்கி விட்டு சொல்லுங்கள் !அப்புறம் பேசலாம் என்று கூறி சென்று விட்டார் .சொத்து மீது ஆசை இல்லாம இருந்த பெண்களின் மனதில் விசத்தை விதத்து விட்டு சென்று விட்டார் ! பெண் மக்களின் புகுந்த வீட்டாரிடமும் ஆசையை தூண்டி விட்டு விட்டார் !
.மாப்பிள்ளையின் தகப்பனார் முகத்தில் எரிமலை வெடித்தது. குப்பண்ணா தப்பித்தேன் பிழைத்தேன் என்று வந்து விட்டார் .
  இரண்டு நாள் கழித்து குப்பண்ணாவை தேடி மாப்பிளையின் தகப்பனார் வந்து விட்டார் .யோவ் உமக்கு நான் என்னையா துரோகம் பண்ணினேன் .சனியன் பிடித்த பயலை கூட்டியாந்து சந்தோசமா இருந்த வீட்டை ரணகளமாக்கி  விட்டீரே !மூணு மக வீட்டுக்காரங்களும் வந்து சொத்தை பிரிச்சு கேக்காங்க  குடும்பத்துக்குள்ளே  ஒரே சண்டை !எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல !பேசாம செத்து போயிரலாமுன்னு  நினைக்கேன் .ஆனா சும்மா செத்து போக மாட்டேன் !அதற்கு காரணம் நீர்தான்னு எழுதி வச்சுட்டுதான் சாவேன் ! என்று கூறி சென்று இருக்கிறார் .
   குப்பண்ணாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை ! இதனால் அவர் வீட்டிலும் சண்டை. அந்த நேரத்தில் போன் வந்தது !எடுத்து பேசியவரின் முகத்தில் அக்னி திராவகம் !  யார் பேசியது என்று கேட்டேன் ! அந்த பயதான் ! அவர் மகளுக்கு  வேற மாப்பிள்ளை  வீடு இருக்கான்னு  கேக்கான்  என்றார் !

Sunday, 14 June 2015

நங்கநல்லூர் ஆஞ்சநேயர்

                                                    நங்கநல்லூர்  ஆஞ்சநேயர்
          
சென்னையை அடுத்த  நங்கநல்லூரில் பல  கோயில்கள் இருக்கின்றன !இந்த ஊருக்கு நங்கை  நல்லூர் ( திருமகள் வாழும் ஊர் )என காஞ்சி பெரியவர்  சந்திர சேகரேந்திர  சுவாமிகளால் பெயரிடப்பட்டது !இப்போது நங்கநல்லூர் என  மருவி  உள்ளது ! இந்த  ஊரில்  பல  கோயில்கள் உள்ளன !முக்கியமாக  சோழர் காலத்திய  தர்மலிங்கேசுவரர்  என்ற சிவன் கோயிலும்  பல்லவர் காலத்திய  லட்சுமி நரசிம்ம  நவநீத கிருஷ்ணன் கோயிலும் இவ்வூரின்  பழமையை  கூறுகின்றன !
 1989 ம்  ஆண்டு தொடங்கப்பட்டு 1995 ம் ஆண்டு கும்பாபிசேகம் செய்யப்பட்ட  ஆஞ்சநேயர்  கோயில் வந்த பிறகு  நங்கநல்லூர்  மிகவும் பிரபல்யம் அடைந்து விட்டது !இந்த ஆஞ்சநேயர் 32 அடி உயரம் உள்ளது !ஒரே கல்லில் செய்யப்பட்டது  !ஆறு அடி உயரமுள்ள தாமிர பீடத்தின்  மீது கூப்பிய கைகளோடு தொழுகிற  நிலையில் காட்சி அளிக்கிறார் !
  அளவில் மிகப்பெரிதான விஸ்வ ரூப ஆஞ்சநேய விக்கிரகம் ஸ்தாபனம் செய்யப்பட்டதால் நங்கநல்லூர்  நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகிற முக்கிய ஸ்தமாகிவிட்டது !
  இந்த கோயில் நங்கநல்லூர்  ராம் நகர் எட்டாவது தெருவில் உள்ளது .இந்த  ஆஞ்சநேயர் ஆதிவ் யாதிஹா பக்த ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படுகிறார் !இங்குள்ள மூலவர் விஸ்வ ரூபத்தில் உள்ளார் ! ஆஞ்சநேயர் மேற்கு முகமாக காட்சி தருகிறார் !நுழை வாயிலும் மேற்கு முகமாக இருக்கிறது !அதன் கோபுரம் 90 அடி உயரம் உள்ளது !
.
Add caption

இந்த கோயில் ஆரம்பத்தில் ஸ்ரீ மாருதி பக்த சமாஜன் டிரஸ்ட் மூலம் நடத்தப்பட்டு வந்து தற்போது இந்து சமய அறநிலையத்துறையால் நடத்தப் பட்டு வருகிறது !
 பிரமாண்டமாக காட்சி அளிக்கும் ஆஞ்சநேயருக்கு பிரதி சனிக்கிழமை  தோறும் விசேச  பூஜைகள் நடை பெறுகின்றது !தவிற ராமர் அவதரித்த நாளாம் ராமநவமி  அதனை ஒட்டி நடத்தப்படும் ராம உற்சவம் போன்ற காலங்களில் வடை மாலை  மற்றும் துளசி மாலைகள் சாத்தப்பட்டு விசேச பூஜைகள்  நடத்தப்படுகின்றன ! வடை மாலைக்கு 6000 வடைகள்  தயார் செய்யப்பட்டு மாலையக்கப்பட்டு ஆஞசநேயருக்கு சாத்தப்பட்டு பக்தர்களுக்கு  விநியோகிக்க ப் படுகிற்கு தாம் !
ஆஞ்சநேயரை வணங்கினால் திருமண தோஷங்கள் நீங்கும் ! புத்திர பாக்கியம் கிட்டும் ! 
ஆஞ்சநேயரை வணங்கி அவன் அருளை பெறுவோமாக !








































































   
Add caption

Thursday, 11 June 2015

நாமக்கல் ஆஞ்சநேயர்

                                              நாமக்கல் ஆஞ்சநேயர்



   நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அவ்வூரில்  நரசிம்மர் நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரே உள்ளது . இவர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கை கூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார் .

      இங்குள்ள ஆஞ்சநேயருக்கு  கோபுரம் கிடையாது ,18 அடி உயரமுள்ள ஒற்றைக்கல்லினால் ஆனது.
  ராமாயண காலத்தில் சஞ்சீவி மூலிகையை பெறுவதற்காக  இமயத்தில் உள்ள சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து வந்தார் ஆஞ்சநேயர் . பணி முடிந்ததும் மலையை அதே இடத்தில வைத்து விட்டு திரும்பினார் ஆஞ்சநேயர் .  அப்போது அங்கிருந்து ஒரு  பெரிய சாளக்கிராமத்தை  பெயர்த்து எடுத்து வந்தார் .வரும்போது சூரியன் உதயமான படியால் வான் வழியாக வந்து கொண்டிருந்த ஆஞ்சநேயர் தனது கையில் இருந்த  சாளக்கிராமத்தை கீழே வைத்து விட்டு சந்தியா  வந்தனத்தை  முடித்தார்! .மீண்டும் வந்து சாளக்கிராமத்தை தூக்க முயற்சித்தார்.! ஆனால் அதை அவரால் தூக்கமுடியவில்லை . அப்போது வானில் இருந்து  "நீ இராமருக்கு வேண்டிய பணிகளை முடித்துவிட்டு வா " என்று ஒரு குரல் கேட்டது. ஆஞ்சநேயரும்  ராமருடன் இருந்து பணிவிடைகள் செய்து பின்பு இலங்கை சென்று சீதாதேவியை சந்தித்து பின்பு ராமர் ராவணனை போரில் கொன்று பின்பு சீதையை மீட்டு  வந்த பின் சாளக்கிராமத்திற்கு வந்தார். அப்போது சாளக்கிராமம் நரசிம்மமூர்த்தியாக  வளர்ந்து நிற்கக்கண்டார். அதன் பின்பு ஆஞ்சநேயர் நரசிம்மரை வணங்கியவாறு நாமக்கல்லில்அருள் பாலித்து வருகிறார். 






Friday, 5 June 2015

வாயு குமாறன்!

                             
                                            ஆஞ்சநேய சுவாமி
 

அஞ்லே ஓன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அசிலே  ஓன்று பெற்றான்  அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஓன்று ஆறாக   ஆரியர்க்காக  ஏகி
 அஞ்சிஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக்காப்பான்

                                                 

ஆஞ்சநேயர்

                அஞ்சிலே   ஒன்று   பெற்றான்   அஞ்சிலே ஒன்றைத்தாவி 
                அஞ்சிலே   ஓன்று   ஆறாக      ஆரியர்க்காக     ஏகி           
                அஞ்சிலே ஓன்று  பெற்ற   அணங்கைக்கண்டு   அயலார் ஊரில் 
                அஞ்சிலே   ஒன்றை  வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்!
         
    
உலகோர் போற்றும் ராம காவியத்திலே எம்பெருமான் ராமபிரான்  முடியை துறந்து காட்டிற்கு சென்று சுக்கிரீவனை சந்தித்தது முதல்  திரும்ப வந்து பட்டாபிஷேகம் நடை பெறும் வரை ராமனுடன் பக்தியுடனும் நெருக்கமாகவும்  பழகி உதவி கரமாக இருந்தவர் ஆஞ்சநேயப் பெருமான் !
   இதில் குகனும் விபீசணனும் சுக்கிரீவனும்  ராமனின் அன்புக்கு பாத்திரமாக இருந்தாலும் குறிப்பிட்ட காலம் வரை தான் உடன் இருந்தார்கள் .
ஆனால்  ஆஞ்சநேயர் மட்டும்தான் இன்றளவும் சிரஞ்சீவியாக வாழ்கிறார்!

Thursday, 4 June 2015

ஊரும் பேரும் சுரண்டை

                           தென்காசி தாலுகாவில் இருந்து  தற்போது வீரகேரளம்புதூர் தாலுகாவில் உள்ள சுரண்டை முன்பு சிறு கிராமமாக இருந்தது.இப்போது பெரிய டவுணாக மாறி விட்டது. முன்பு ஆர்.ஸி.ஆரம்பபள்ளி, ஜவகர் ஆரம்ப பள்ளி, TDTA ஆரம்ப பள்ளி மற்றும் பேரன் புரூக் உயர்நிலை பள்ளி என இவைகள்தான் இருந்தன .இன்று கல்லூரி  வந்து விட்டது .முன்பு வீரகேரள. ம்புதுரில் இருந்து ஒரு டாக்டர் மட்டும் வந்து போவார் .. இப்போது பெரிய பெரிய மருத்துவ மனைகள் பல வந்து விட்டன .
                         அந்த ஊரின் பெயர் காரணம் பற்றி பலர் பல விதமாக சொல்வார்கள் .ஆனால் அதற்கு ஒரு வரலாறு உண்டு.சுரர்கள் அண்டையில் வாழ்ந்த சுரண்டை மாநகரம் வாழ்க என்று ஒரு பாடல் இருப்பதாக கூறுவார்கள் .அதாவது சுரர்கள் என்றால் ராமனுடைய படைகள் .அசுரர்கள் என்றால் ராவணனுடைய படைகள் .ராமனுடைய படைகள் அருகில் தங்கி இருந்ததால்தான் சுரர்கள் +அண்டை =சுரண்டை எனபெயர் வந்ததாக கூறுவார்கள் . அதனால்தான் அங்கு ஓடும் நதிக்கு அனுமன் நதி என்று பெயர் .

  

இந்த ஊருக்கு மேற்கே நான்கு கிமீ தூரத்தில் சாம்பவர்வடகரை  என்ற ஊர் இருக்கிறது .ஜாம்புவர் என்பதுதான் சாம்பவர் என மருவி விட்டது .கிழக்கே ஆலங்குளத்திற்கு வடக்கே மாயமான் குறிச்சி என்ற ஊர் இருக்கிறது.ஆக ராமாயண சம்பந்தப்பட்ட பெயர்களாக அமைந்திருப்பது நமக்கெல்லாம் பெருமைதான்! .