அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஓன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஓன்று பெற்ற அணங்கைக்கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்!
உலகோர் போற்றும் ராம காவியத்திலே எம்பெருமான் ராமபிரான் முடியை துறந்து காட்டிற்கு சென்று சுக்கிரீவனை சந்தித்தது முதல் திரும்ப வந்து பட்டாபிஷேகம் நடை பெறும் வரை ராமனுடன் பக்தியுடனும் நெருக்கமாகவும் பழகி உதவி கரமாக இருந்தவர் ஆஞ்சநேயப் பெருமான் !
இதில் குகனும் விபீசணனும் சுக்கிரீவனும் ராமனின் அன்புக்கு பாத்திரமாக இருந்தாலும் குறிப்பிட்ட காலம் வரை தான் உடன் இருந்தார்கள் .
ஆனால் ஆஞ்சநேயர் மட்டும்தான் இன்றளவும் சிரஞ்சீவியாக வாழ்கிறார்!

No comments:
Post a Comment