நாமக்கல் ஆஞ்சநேயர்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அவ்வூரில் நரசிம்மர் நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரே உள்ளது . இவர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கை கூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார் .
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அவ்வூரில் நரசிம்மர் நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரே உள்ளது . இவர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கை கூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார் .
இங்குள்ள ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது ,18 அடி உயரமுள்ள ஒற்றைக்கல்லினால் ஆனது.
ராமாயண காலத்தில் சஞ்சீவி மூலிகையை பெறுவதற்காக இமயத்தில் உள்ள சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து வந்தார் ஆஞ்சநேயர் . பணி முடிந்ததும் மலையை அதே இடத்தில வைத்து விட்டு திரும்பினார் ஆஞ்சநேயர் . அப்போது அங்கிருந்து ஒரு பெரிய சாளக்கிராமத்தை பெயர்த்து எடுத்து வந்தார் .வரும்போது சூரியன் உதயமான படியால் வான் வழியாக வந்து கொண்டிருந்த ஆஞ்சநேயர் தனது கையில் இருந்த சாளக்கிராமத்தை கீழே வைத்து விட்டு சந்தியா வந்தனத்தை முடித்தார்! .மீண்டும் வந்து சாளக்கிராமத்தை தூக்க முயற்சித்தார்.! ஆனால் அதை அவரால் தூக்கமுடியவில்லை . அப்போது வானில் இருந்து "நீ இராமருக்கு வேண்டிய பணிகளை முடித்துவிட்டு வா " என்று ஒரு குரல் கேட்டது. ஆஞ்சநேயரும் ராமருடன் இருந்து பணிவிடைகள் செய்து பின்பு இலங்கை சென்று சீதாதேவியை சந்தித்து பின்பு ராமர் ராவணனை போரில் கொன்று பின்பு சீதையை மீட்டு வந்த பின் சாளக்கிராமத்திற்கு வந்தார். அப்போது சாளக்கிராமம் நரசிம்மமூர்த்தியாக வளர்ந்து நிற்கக்கண்டார். அதன் பின்பு ஆஞ்சநேயர் நரசிம்மரை வணங்கியவாறு நாமக்கல்லில்அருள் பாலித்து வருகிறார்.



No comments:
Post a Comment