ஆறை நூறாக்கு
எனது நண்பர் குப்பண்ணா புதிதாக மூன்று நபர்களுடன் வந்தார் .அவர்கள் மூவரும் சென்ற மாதம் வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் என்றும் அவர்களில் ஒருவர் மகளுக்கு வரனின் ஜாதகம் கேட்க வந்திருக்கிறார்கள் என்றும் குப்பண்ணா கூறினார் ! தூத்துக்குடி உறவினர் செய்த கலாட்டாவில் இருந்து ஜாதகத்தை கொடுப்பதோடு சரி !கூடப்போய் பேசுவதெல்லாம் கிடையாது ! இவர்கள் மூவரையும் மூத்த குடி மக்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு கூட்டி வந்திருக்கிறார் ! அவர்களிடம் பெசிக்கொண்டு இருக்கும்போது அவர்களில் இருவர் சேமிப்பு தொகையாக பல லட்சங்கள் பெற்றதாகவும் ஒருவர் மட்டும் கொஞ்ச பணமே பெற்றாகவும் கூறினர் !
நீங்கள் மூவரும் ஓன்று போல் வேலை பார்த்தவர்கள்தானே ? அவருக்கு மட்டும் ஏன் குறைவாக பணம் கிடைத்தது ?என்று கேட்டேன் .
அதற்கு அவர் சார் சில வருடங்களுக்கு ஒரு முறை என் சேமிப்பில் இருந்து பணத்தை எடுத்து விடுவேன் ! அதைஅப்படியே குறைந்த விலையில் பிளாட்டுகாக வாங்கி விடுவேன் ! என் மனைவி பேருக்கும் பிள்ளைகள் பேருக்கும் வாங்கி விடுவேன் .சர்க்காரில் பெர்மிசனும் வாங்கி விடுவேன் ! இப்போது அவைகள் கோடிக்கணக்கில் மதிப்பு உள்ளதாக இருக்கிறது ! அவர்கள் சேமிப்பு பணத்தை எடுக்காமல் இருந்து என்ன பயன் ? ஆனால் நான் அதை எடுத்து முதலீடு செய்து விட்டேன் !இப்போது சொல்லுங்கள் ! யார் செய்தது சரி என்று கேட்டார் .
எனக்கு மக்களை பெற்ற மகராசி படத்தில் வந்த பாட்டுதான் ஞாபகத்திற்கு வந்தது !
சேத்த பணத்தை சிக்கனமா செலவு பண்ண பக்குவமா
அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு -அவுங்க
ஆறை நூறு ஆக்குவாங்க செல்லக் கண்ணு !
இவரே ஆறை நூறா ஆக்கிட்டாரு!

No comments:
Post a Comment