நான் காலையில் எழுந்து காப்பி குடித்து பேப்பர் படித்துமுடிக்கவும் எனது நண்பர் குப்பண்ணா வந்தார் .அவரும் நானும் பால்ய சிநேகிதர்கள் .இருவரும் ஓய்வு பெற்றதும் எங்களால் முடிந்த பொது சேவைகளை செய்து வருகிறோம் .குப்பண்ணாவிடம் ஜாதகங்கள் நிறைய வரும் .மாப்பிள்ளை ஜாதகங்கள் பெண் ஜாதகங்கள் என்று ! அவற்றை தகுந்தவர்களிடம் கொடுத்து கல்யாணத்தை கூட இருந்து முடித்து வைப்பார் !பணம் எதுவும் வாங்க மாட்டார் !இலவசமாகவே செய்வார் ! பெண்ணை பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருகிறார்கள் என்றால் இவர் காசிலேயே கடிதம் எழுதுவார் !
அன்று அவர் முகம் கொஞ்சம் வாடி இருந்தது ! என்ன குப்பண்ணா முகம் ஒரு மாதிரி இருக்கிறதே என்ன விஷயம் என்று கேட்டேன் !
இனி ஜாதகத்தை கொடுப்பதோடு சரி !கல்யாணத்தை கூட இருந்து எல்லாம் முடிக்க கூடாது என்றார் ! ஏதாவது பிரச்சினையா? என்று கேட்டேன் வெட்டு குத்துதான் பாக்கி !மற்ற எல்லாம் நடந்து போச்சு என்றார் !
அவராகவே சொல்லட்டும் என்று இருந்தேன் ! அவர் உறவினர் ஒருவர் தூத்துக்குடியில்இருக்கிறார் . அவர் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க டவுனுக்கு கூட்டிச் சென்று இருக்கிறார் .மாப்பிள்ளை வீட்டில் இரண்டு பையன்களும் மூன்று பெண்களும் இருக்கிறார்கள் !மூன்று பெண்களுக்கும் திருமணம் ஆகி விட்டது !பையன்களில் மாப்பிள்ளைதான் மூத்தவர் !
குப்பண்ணா கூட்டிச் சென்ற உறவினர் மாப்பிள்ளை வீட்டாரிடம் சொத்து பத்துக்களை பற்றி விசாரித்து விட்டு உங்களுக்குள் பாகப்பிரிவினை ஆகி விட்டதா என்று கேட்டிருக்கிறார் ! அதற்கு மாப்பிள்ளையின் தகப்பனார் எல்லாம் என் சுய சம்பாத்தியம்தான்! என் இளைய மகனுக்கும் கல்யாணம் முடிந்தவுடன் உயில் எழுதி வைத்து விடுவேன் என்று கூறி இருக்கிறார் !
அதற்கு குப்பண்ணா கூட்டிசென்ற நபர் அதெல்லாம் சரிப்பட்டு வராது !பின்னாடி பெண்கள் தகராறு செய்யும் !இப்பவே அவர்களிடம் விடுதலை பத்திரம் எழுதி வாங்கி விடுங்கள் என்று கூறி இருக்கிறார் ! அதற்கு மாப்பிள்ளையின் அப்பா என் பெண்கள் தகராறு எல்லாம் செய்யாது .என் பிள்ளைகள் நல்லவர்கள். நான் சொல்வதை கேட்பார்கள் .என்று கூறி இருக்கிறார் . பெண்ணின் தகப்பனார் பெண்கள் நல்லவர்களாக இருக்கலாம் .ஆனால் அவர்களின் கணவர்கள் தகராறு செய்யலாம். அல்லது மாப்பிள்ளை மார்களின் பெற்றோர் தகராறு செய்யலாம் .ஆகவே எல்லோரையும் கூட்டி வைத்து பேசி விடுதலை பத்திரம் எழுதி வாங்கி விட்டு சொல்லுங்கள் !அப்புறம் பேசலாம் என்று கூறி சென்று விட்டார் .சொத்து மீது ஆசை இல்லாம இருந்த பெண்களின் மனதில் விசத்தை விதத்து விட்டு சென்று விட்டார் ! பெண் மக்களின் புகுந்த வீட்டாரிடமும் ஆசையை தூண்டி விட்டு விட்டார் !
.மாப்பிள்ளையின் தகப்பனார் முகத்தில் எரிமலை வெடித்தது. குப்பண்ணா தப்பித்தேன் பிழைத்தேன் என்று வந்து விட்டார் .
இரண்டு நாள் கழித்து குப்பண்ணாவை தேடி மாப்பிளையின் தகப்பனார் வந்து விட்டார் .யோவ் உமக்கு நான் என்னையா துரோகம் பண்ணினேன் .சனியன் பிடித்த பயலை கூட்டியாந்து சந்தோசமா இருந்த வீட்டை ரணகளமாக்கி விட்டீரே !மூணு மக வீட்டுக்காரங்களும் வந்து சொத்தை பிரிச்சு கேக்காங்க குடும்பத்துக்குள்ளே ஒரே சண்டை !எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல !பேசாம செத்து போயிரலாமுன்னு நினைக்கேன் .ஆனா சும்மா செத்து போக மாட்டேன் !அதற்கு காரணம் நீர்தான்னு எழுதி வச்சுட்டுதான் சாவேன் ! என்று கூறி சென்று இருக்கிறார் .

குப்பண்ணாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை ! இதனால் அவர் வீட்டிலும் சண்டை. அந்த நேரத்தில் போன் வந்தது !எடுத்து பேசியவரின் முகத்தில் அக்னி திராவகம் ! யார் பேசியது என்று கேட்டேன் ! அந்த பயதான் ! அவர் மகளுக்கு வேற மாப்பிள்ளை வீடு இருக்கான்னு கேக்கான் என்றார் !

No comments:
Post a Comment