Monday, 29 June 2015

ஹோட்டலில் சுத்தம்

                                       
   திருநெல்வேலி ஜங்ஷன் ஹோட்டல் ஒன்றில் நானும் எனது நண்பரும் சாப்பிடச் சென்றோம் .தோசைக்கு ஆர்டர் கொடுத்தோம் .கொஞ்ச நேரம் கழித்து ஹனுமார் சஞ்சீவி மலையை தூக்கி வருவது போல சர்வர் இரண்டு கைகளிலும் இரண்டு பிளேட்டுகளில் தோசையை கொண்டு வந்தார்!.அது வரை சரிதான் !ஆனால் தோசையை என் முன்னால்மேஜையில் வைக்கும் போதுதான் கவனித்தேன் .சர்வருடைய பெருவிரல்கள் தோசைகள் மீது அழுத்தமாக பதிந்திருந்தது .தோசைகள் கீழே விழுந்து விடக்கூடாது அல்லவா?
 எனக்கு  கொடுத்த தோசையின் மீது அவரது இடது கை பெரு விரல் அழுத்தமாக பதிந்திருந்தது !நான் வடிவேல் ஒரு சினிமாவில் சர்வரை பார்ப்பாரே அது போல பார்த்தேன் .கட்டை விரலை தோசை மீது வைத்து வருகிறாயே என்றேன் .உணவு மீது கையே படக்கூடாது! கையில் உறை மாட்டித்தான் பரிமாற வேண்டும்.இந்த லட்சணத்தில் கையில் உறை மாட்டாததோடு அதன் மேல் பெருவிரலை வைத்து அழுத்திக் கொண்டு வருகிறார் !அதுவும் எனக்கு மட்டும் ஸ்பெஷலாக  இடது கை பெருவிரல்! எனக்கு குமட்டல் வந்தது. பிறகு முதலாளியை கூப்பிட்டு சொன்னேன் .அவர் வந்து அவனை சத்தம் போட்டு வேறு ஒரு சர்வரை கூப்பிட்டு இந்த தோசைகளை எடுத்துக்கொண்டு  போய் பெரிய தாளத்தில் தட்டுகளை வைத்து கை படாமல் வேறு தோசைகள் கொண்டுவரச்சொன்னார்!.சர்வர் எங்கள் முன்பு வைத்த தட்டுகளை எடுக்க வந்தார்.நான்  வேறு தோசைகளை கொண்டுவந்து வைத்து விட்டு இந்த தோசைகளை எடுத்து போ என்றேன் .இதே தோசையை கொண்டு போய் வேறு தட்டுகளில் வைத்து கொண்டு வந்தால் நமக்கு  எப்படி தெரியும்?அதோடு  தண்ணீர் கொண்டு வரும் போது ஒவ்வொரு கிளாசிலும் ஒவ்வொரு விரலை நுழைத்துதான் கொண்டு வருகிறார்கள் !இதை அதிகாரிகளும் கண்டு கொள்ளுவதில்லை !முதலாளிகளும் கண்டு கொள்ளுவதில்லை !நான் அந்த தண்ணீரை குடிப்பதே இல்லை !
       என்னோமோ போங்க! ஹோட்டலில் போய் சாப்பிட்டு விட்டு  வருவது பணம் கொடுத்து நோயை விலைக்கு வாங்கி வருவது போலத்தான் இருக்கிறது! என்ன செய்ய !

No comments:

Post a Comment