Sunday, 26 November 2017

மனிதர்கள் எத்தனை வகை!

வாங்க சார்! என்ன வேணும் ?

ஃபிரிட்ஜ் வேணும்

என்ன ரேட்ல சார் வேணும் ?

12 ல இருந்து 15 ஆயிரத்தில்

இந்தா இருக்கு பாருங்க சார்

இதையே எடுத்துக்கிறேன்... ஆனா என்கிட்டே 1300 ரூபாய்தான் இருக்கு.

பரவாயில்ல சார்! இன்ஸ்டால் மெண்ட்ல கட்டலாம் சார். நீங்க என்ன வேலை பார்க்கிறிங்க?

இப்போதைக்கு வேலை இல்லை. வேலை தேடிகிட்டு இருக்கேன். ஆனா அடுத்த மாதம் ஃபுல்லா செட்டில் பண்ணிருவேன்.

என்ன சார் நீங்க! பணமும் இல்லை, வேலையும் இல்லை, உங்களை நம்பி எப்படி சார் கொடுக்கிறது.

சார் எங்க வீட்டில 6 பேர் இருக்கோம்.
நான் இருக்கிறது ஆர் கே நகர் தொகுதி.

என்னாது! ஆர் கே நகர் தொகுதியா! இதை வந்தவுடனே சொல்லக்கூடாதா சார்... முதல்ல உக்காருங்க சார்!

ஃபிரிட்ஜ் மட்டும் போதுமா... இல்லை
வேற ஏதாவது வேணுமா சார்

இப்போதைக்கு இது போதுங்க... அடுத்து பொது தேர்தல் வரும்போது...

ஓ கே சார்!
டேய் தம்பி... சாருக்கு கூல்ட்ரிங்ஸ் கொண்டு வா
🙄😎😜

Friday, 10 November 2017

பிழைக்கும் வழி!

படித்த அந்த இளைஞனுக்கு தகுந்த வேலை கிடைக்க வில்லை.அது வரை சும்மா இருக்கக்கூடாது என்று எண்ணி ஒரு ஜவுளி கடையில்  போய் வேலை கேட்டான்.அவர் தம்பி! கடையில்  இப்போது வேலை காலி இல்லை.ஆனாலும் உனக்கு ஒரு வேலை தருகிறேன்.கடை விளம்பர நோட்டீசு தருகிறேன்.
அதை மக்கள் கூடுகிற இடமாக பார்த்து விதியோகம் செய். உன் திறமையை பார்த்து வேலை தருகிறேன் என்றார். இவனும் சம்மதித்து நோட்டீசுகளை வாங்கிச் சென்றான்.மறு நாளில் இருந்து கோவில்கள்,மார்க்கெட்,பொதுக்கூட்டம் ,பஸ்நிலையம், ரயில்வே ஸ்டேசன் இப்படி மக்கள் கூடுகிற இடங்களாக பார்த்து நோட்டீசுகளை விநியோகம் செய்தான்.ஆனால் எல்லா மக்களும் நோட்டீசுகளை வாங்கிய உடன் கசக்கி போட்டு விட்டனர் ஒருவராவது அதை படிக்க வில்லை.
இவனுக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது.நாம் பிழைக்கவே முடியாதா? சாகத்தான் வேண்டுமா? இந்த நோட்டீசை விநியோகிக்க முடியாத நாம் இனி எந்த வேலைக்கு லாயக்கு? இவ்வாறு பலவாறு சிந்தித்தான் இரவு முழுதும் தூங்க வில்லை.
திடீரென்று ஐசக் நியூட்டனுக்கு யோசனை தோன்றியது போல இவனுக்கும் தோன்றியது.
நாம் நல்ல நோட்டீசை கொடுத்தால் கசக்கி எறிகிறார்கள்.நாம் கசக்கி கொடுத்தால்  என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம் என எண்ணி எல்லா நோட்டீசுகளையும் இவனே கசக்கி ஒரு பை நிறைய  எடுத்துக் கொண்டான்.
மக்கள் கூடுகிற இடமாக நின்று கசக்கிய நோட்டீசுகளை கொடுத்தான்.என்ன ஆச்சரியம்.அவ்வளவு பேரும் கசக்கிய நோட்டீசை அக்கறையாக பிரித்து ஆர்வமுடன் படித்தனர்.விளம்பரம் வேகமாக பரவியது.கடையில் கூட்டம் அலை மோதியது.
இவன் திகைத்து விட்டான்.மக்கள் புரியாத புதிர்!எதையும் எதிர்மறையாக சொன்னால்தான் கேட்பார்கள்.மக்களின் இந்த மனோபாவம்தான் அரசியல் வாதிகளின் மூலதனம்! மக்கள் எதை நம்புகிறார்களோ,எதை விரும்புகிறார்களோ அதற்கு எதிர்மறையாகச்  சொன்னால் காது கொடுத்துகேட்பார்கள்! இது முதல் போடாத மூலதனம்!
அரசியல்வாதிகளை பல கோடிகளுக்கு அதிபதி ஆக்குவது இந்த மூலதனம்தான்.
இப்போது இவனும் மக்களை புரிந்து கொண்டான்!
நாளை இவனும் ஒரு அரசியல்வாதி ஆகலாம்! யார் கண்டது!