படித்த அந்த இளைஞனுக்கு தகுந்த வேலை கிடைக்க வில்லை.அது வரை சும்மா இருக்கக்கூடாது என்று எண்ணி ஒரு ஜவுளி கடையில் போய் வேலை கேட்டான்.அவர் தம்பி! கடையில் இப்போது வேலை காலி இல்லை.ஆனாலும் உனக்கு ஒரு வேலை தருகிறேன்.கடை விளம்பர நோட்டீசு தருகிறேன்.
அதை மக்கள் கூடுகிற இடமாக பார்த்து விதியோகம் செய். உன் திறமையை பார்த்து வேலை தருகிறேன் என்றார். இவனும் சம்மதித்து நோட்டீசுகளை வாங்கிச் சென்றான்.மறு நாளில் இருந்து கோவில்கள்,மார்க்கெட்,பொதுக்கூட்டம் ,பஸ்நிலையம், ரயில்வே ஸ்டேசன் இப்படி மக்கள் கூடுகிற இடங்களாக பார்த்து நோட்டீசுகளை விநியோகம் செய்தான்.ஆனால் எல்லா மக்களும் நோட்டீசுகளை வாங்கிய உடன் கசக்கி போட்டு விட்டனர் ஒருவராவது அதை படிக்க வில்லை.
இவனுக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது.நாம் பிழைக்கவே முடியாதா? சாகத்தான் வேண்டுமா? இந்த நோட்டீசை விநியோகிக்க முடியாத நாம் இனி எந்த வேலைக்கு லாயக்கு? இவ்வாறு பலவாறு சிந்தித்தான் இரவு முழுதும் தூங்க வில்லை.
திடீரென்று ஐசக் நியூட்டனுக்கு யோசனை தோன்றியது போல இவனுக்கும் தோன்றியது.
நாம் நல்ல நோட்டீசை கொடுத்தால் கசக்கி எறிகிறார்கள்.நாம் கசக்கி கொடுத்தால் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம் என எண்ணி எல்லா நோட்டீசுகளையும் இவனே கசக்கி ஒரு பை நிறைய எடுத்துக் கொண்டான்.
மக்கள் கூடுகிற இடமாக நின்று கசக்கிய நோட்டீசுகளை கொடுத்தான்.என்ன ஆச்சரியம்.அவ்வளவு பேரும் கசக்கிய நோட்டீசை அக்கறையாக பிரித்து ஆர்வமுடன் படித்தனர்.விளம்பரம் வேகமாக பரவியது.கடையில் கூட்டம் அலை மோதியது.
இவன் திகைத்து விட்டான்.மக்கள் புரியாத புதிர்!எதையும் எதிர்மறையாக சொன்னால்தான் கேட்பார்கள்.மக்களின் இந்த மனோபாவம்தான் அரசியல் வாதிகளின் மூலதனம்! மக்கள் எதை நம்புகிறார்களோ,எதை விரும்புகிறார்களோ அதற்கு எதிர்மறையாகச் சொன்னால் காது கொடுத்துகேட்பார்கள்! இது முதல் போடாத மூலதனம்!
அரசியல்வாதிகளை பல கோடிகளுக்கு அதிபதி ஆக்குவது இந்த மூலதனம்தான்.
இப்போது இவனும் மக்களை புரிந்து கொண்டான்!
நாளை இவனும் ஒரு அரசியல்வாதி ஆகலாம்! யார் கண்டது!
Friday, 10 November 2017
பிழைக்கும் வழி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment