சில திருமண வீடுகளுக்கு அழைப்பிதழ் கொடுக்க வருவார்கள். நீங்கள் கட்டாயம் வர வேண்டும். உங்களை எதிர் பார்த்திருப்பேன்.என்று கூறுவார்கள்.ஆனால் கல்யான வீட்டுக்கு போனால் வரவேற்க ஆள் இருக்காது.நம்மை நாமே வறவேற்றுக் கொள்ள வேண்டியதுதான்.நாமே மணமேடைக்குச் சென்று நாமே அறிமுகப் படுத்தி மொய் கொடுத்து விட்டு டைனிங் ஹாலில் நாமே போய் சாப்பிட்டு விட்டு தாம்பூலத்தை நாமே கேட்டு வாங்கி வீடு வந்து சேர வேண்டும்.
சில வீடுகளில் போனால் உரியவர் இரண்டு கையை நீட்டி மாமா வாங்க! அண்ணா வாங்க! அத்தான் வாங்க! உறவு முறை இல்லை என்றால் ஐயா வாங்க என்று அன்போடு வரவேற்று மணமேடைக்கு அழைத்துச் சென்று அறிமுகப் படுத்தி,ஒரு ஆளை ஏற்பாடு செய்து சாப்பாட்டிற்கு அழைத்துச் செல்ல சொல்வார்கள்.அவரும் நம்மை உபசரித்து தாம்பூல கவரும் வாங்கி கொடுத்து அனுப்பி வைப்பார்.
பலரும் காலையில் எழுந்து குளித்து பஸ்ஸை பிடித்து சமயத்தில் ஸ்டாண்டிங்கிலேயே நிற்க வேண்டி வரும். பின் ஆட்டோ பிடித்து திருமண மண்டபம் போவார்கள்.
இப்படி கஷ்டப்பட்டு வருகிறவர்களை அன்புடன் வரவேற்று உபசரித்தால் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கும்.பஸ்ஸில் பட்ட கஷ்டம் எல்லாம் மறந்து போகும்.
பிறரை வரவேற்று உபசரிப்பதே தமிழனின் பண்பாடு!
Tuesday, 31 October 2017
நாட்டு நடப்பு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment