Thursday, 19 December 2013

முதுமையை போற்றுவோம்!

முதுமை யை நாம்  போற்றுவோம் .முதுமை என்பது ---அனுபவம் என்ற அறிவை சேமித்து வைத்த நூலகம் .ஆண்டுகள் பல செதுக்கி வைத்த அபூர்வ கல்வெட்டு .இயற்கையின் சக்தியை அறிவால் தெளிந்த கால பெட்டகம் .ஈகை செய்வதே ஈசனைக் காண வழி என அறிந்த கலைக்களஞ்சியம் .உலகத்தை உணர்ந்து வாழ்ந்த பின் ஓய்வு எடுக்கும் உன்னத ஊஞ்சல் .ஊருடன் சேர்ந்து வாழ்ந்திருப்பதால் கிடைத்த உன்னத மன நிறைவு .எல்லோரும் அவனே எல்லாமும் அவனே என தெளிந்த ஞானம் .ஏற்றமும் இறக்கமும் இயற்கையின் நியதி என உணர்ந்த மாண்பு .ஐயம் கொள்வதை அறவே நீக்கிய பட்டறிந்த பாடம் .ஒற்றுமையாய் வாழ்பவன் உன்னத மனிதன் என உணர்த்தும் ஒளி விளக்கு .ஓய்வு என்பது உடலுக்குத்தான் மனதிற்கில்லை என்பதை பறை சாற்றும் பாசறை .ஔசதமெனெ அனைவருக்கும் இருக்க வேண்டும் என உணர்த்தும் மாமந்திரம் . 

Saturday, 14 December 2013

வாரியார் சுவாமிகள் அருள் வாக்கு!

மழைக்காலத்திற்கு  வேண்டியதை வெயில் காலத்தில் சேமித்துக் கொள்ளவேண்டும் .முதுமைக் காலத்திற்கு வேண்டியதை இளமைக் காலத்தில் சேமித்துக் கொள்ள வேண்டும்....கிருபானந்த வாரியார் சுவாமிகள் 

Thursday, 12 December 2013

Manathil malarthavai...

சினிமா  பற்றி .......
கா லை முதல் மாலை வரை
               கடுமையாய்  உழைத்து விட்டு
மாலையிலே திரைபடத்தை
               மகிழ்வோடு  பார்க்க சென்றால்
ஆலையிலே  ஒர்  கரும்பாய்
               அரைக் கின்றார்  நம் மனதை
பாலையிலே  வீழ்வதற்கா

               பார்க்கின்றோம்  திரை ப் படத்தை.........