முதுமை யை நாம் போற்றுவோம் .முதுமை என்பது ---அனுபவம் என்ற அறிவை சேமித்து வைத்த நூலகம் .ஆண்டுகள் பல செதுக்கி வைத்த அபூர்வ கல்வெட்டு .இயற்கையின் சக்தியை அறிவால் தெளிந்த கால பெட்டகம் .ஈகை செய்வதே ஈசனைக் காண வழி என அறிந்த கலைக்களஞ்சியம் .உலகத்தை உணர்ந்து வாழ்ந்த பின் ஓய்வு எடுக்கும் உன்னத ஊஞ்சல் .ஊருடன் சேர்ந்து வாழ்ந்திருப்பதால் கிடைத்த உன்னத மன நிறைவு .எல்லோரும் அவனே எல்லாமும் அவனே என தெளிந்த ஞானம் .ஏற்றமும் இறக்கமும் இயற்கையின் நியதி என உணர்ந்த மாண்பு .ஐயம் கொள்வதை அறவே நீக்கிய பட்டறிந்த பாடம் .ஒற்றுமையாய் வாழ்பவன் உன்னத மனிதன் என உணர்த்தும் ஒளி விளக்கு .ஓய்வு என்பது உடலுக்குத்தான் மனதிற்கில்லை என்பதை பறை சாற்றும் பாசறை .ஔசதமெனெ அனைவருக்கும் இருக்க வேண்டும் என உணர்த்தும் மாமந்திரம் .
மனத்துக்கு தண்டனை உண்டு
ReplyDelete---------------------------------------------------
காந்தி அடிகள் மூன்று பொம்மைகள் வைத்திருந்தார்!ஒன்று தீயதைப் பார்க்காதே.இரண்டு தீயதைப் பேசாதே. மூன்று தீயதைக் கேட்காதே.நான்காவதுபொம்மையும் வேண்டும். தீயதை நினைக்காதே என்று கூறினார் கலைவானர்!!