Vinayak
Monday, 1 June 2020
மறக்க முடியாத நினைவுகள்
Wednesday, 31 January 2018
நாட்டின் நிலை!
இன்றைய சிந்தனை!
#############
பாரதியார், வ.உ.சி. காமராஜர்,முத்துராமலிங்கத்தேவர், அம்பேத்கார் போன்ற பெரிய தலைவர்கள். எல்லாம் குடியைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. என்ன காரணம்? அப்போது குடிப்பது மிகவும் கேவலமான செயல் என்ற எண்ணமும்,குடிப்பவனை மனிதனாக எவனும் மதிக்காத நிலையும் இருந்தது. அதனால் அவர்கள் அது பற்றி எதுவும் சொல்ல வில்லை!
ஆனால் ஆளும் கட்சிகள் அனைத்தையும் உடைத்து வருமானம் ஒன்றையே குறிக் கோளாக கொண்டு டாஸ்மாக் கடைகளை தெருவெங்கும் திறந்துவிட்டு தொழிலாளிகள் இளைஞர் இளைஞ்சிகள்,,மாணவ,மாணவிகள் என்று அனைத்து தரப்பினரையும் குடிக்க பழக்கி விட்டது.அரசாங்கமே கடைகளை திறந்து விற்பதால் குடிப்பதை கேவலமாக நினைக்கும் எண்ணம் மறைந்து அது கவுரச்செயல் போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி விட்டது.அரசாங்கம் வேலை வாய்ப்பை பெருக்க வேண்டும்,மக்களின் வருமானத்தை பெருக்கி வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும். அனைவருக்கும் இலவச கல்வியை வழங்கவேண்டும் .குடிப்பவனை திருத்த வேண்டும்.
ஆனால் இங்கு அரசே குடிக்கச் செய்து வருமானத்தை பெருக்குகிறது் அதை இலவசங்களாக மக்களுக்கு கொடுக்கிறது. மக்களும் அதை பெற்றுக் கொண்டு ஓட்டு போடுகிறார்கள். வருமானம் இல்லாத போது குடிக்க பழகியவனால் நிறுத்த முடிய வில்லை.எனவே தவறான வழிகளில் சம்பாதிக்க முனைகிறான் இப்படியே சுழற்சியாக நடந்து கொண்டிருந்தால் வருங்கால சமுதாயம் என்னவாகும்.? பெருமைக் குறிய தமிழ்ச் சமுதாயம் அழிந்துவிடக் கூடும்.
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என மேடைகளில் கேட்டு புழகாகிதம் அடைந்தோம் .கல் தோன்றி மண்தோன்றா காலத்தே மூத்த குடி என்று வீர வசனம் பேசி காலத்தை போக்கினோம். ஆனால் இன்றைய நிலை என்ன? தமிழர்களும் எடுத்தேறி போக வேண்டிய நிலை வந்து விடக் கூடாது.அறிஞர்களும் இளைஞர்களும் சிந்திக்க வேண்டும்.
மனித மனம்!
அரசாங்க பதவி!
##############
எனது நண்பர் ஒருவர் அரசாங்கத்தில் உயர்ந்த பதவியில் இருந்தார்.அவருக்கு தன் தலை மேல்தான் அந்த அலுவலகம் நடக்கிறது என்ற ஓர் எண்ணம். காலையில் 9 மணிக்கு அலுவலகம் போய்விடுவார். இரவு 9மணிக்கு தான் வீட்டிற்கு திரும்புவார்.உறவினர் வீட்டு விஷேசங்களுக்கு கூட லீவு போட மாட்டார்..விஷேசங்களுக்கு போக மாட்டார்.
அவருக்கு 60 வயதில் ஓய்வு கொடுத்து விட்டார்கள். இப்போதும் இவர் இல்லாமல் அந்த அலுவலகம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.ஆனால் இவர்தான் தான் இல்லாமல் நடக்காது என்று நினைத்து மாடாய் உழைத்து உடம்பை கெடுத்துக் கொண்டார்.மாடாய் உழைக்காமல் மனிதனாய் உழைத்தாலே போதும்.யாரும் உங்களுக்கு கிரீடம் தரப் போவதில்லை!
அரசாங்கம் என்ற மெசின்உங்கள் உழைப்பை உறிஞ்சி சக்கையாய் வெளியே வீசி விட்டது. இப்போது அந்த அலுவலகமும் அவரை மறந்துவிட்டது. உறவினர்கள் வீடுகளுக்கு போகாததால் அவர்களும் மறந்து விட்டனர்.
எனவே இம்போதுள்ள நண்பர்களே உங்களால்தான் ஆபீஸ் நடக்கிறது என்று எண்ண வேண்டாம் .நீங்கள் இல்லாவிட்டால் வேறொருவர் நடத்துவார்.அன்றன்றுள்ளவேலையை ஒழுங்காக செய்யுங்கள்.பைல்களை தேங்க விடாதீர்கள்.மக்கள் சேவகன் என்ற நினைப்பை மனதில் வைத்து ஏழை எளிய மக்கள் அலுவலகத்திற்கு வந்தால் அவர்களை மதித்து உதவி புரியுங்கள். உறவினர்கள் விஷேங்களுக்கு மகிழ்வுடன் சென்று வாருங்கள்.
வாழ்க்கையை அனுபவியுங்கள்.
.
Tuesday, 30 January 2018
மனிதர்கள் பல வகை!
மக்கள் நலன் பேணுதல்!
##############
அரசர் ஒருவர் தனக்கு உதவியாக தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளும் பொருட்டு சில இளைஞர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்காக
குரு ஒருவரிடம் அனுப்பி வைத்தார். குரு அவர்களில் மூன்று பேரை தேர்ந்தெடுத்து சில வருடங்கள் கல்வி மற்றும் பல கலைகளை கற்று கொடுத்தார். பின் குரு அவர்களை அழைத்து உங்களுக்கு அனைத்தும் கற்று கொடுத்து விட்டேன். இனி நீங்கள் அரசரிடம் போகலாம் என்றார். மாணவர்கள் மூவரும் அரசரைப் பார்க்க கிளம்பினர்.சிறிது தூரம் சென்றதும் வழியில் இந்த ஓரத்தில் இருந்து மறு பக்கம் வரை முட்கள் பரவி கிடந்தது. இதை பார்த்த இளைஞர்களில் ஒருவன் பின்னால் போய் ஒரே ஓட்டமாக ஓடி வந்து முட்களை தாண்டி அந்தப் புறம் குதித்து விட்டான்.
இரண்டாவது இளைஞன் பாதையின் ஒரு ஓரமாக போய் அதில் இருந்த சிறு இடை வெளியில் அடிமேல் அடி வைத்து அந்தப் பக்கம் போய் விட்டான்.
மூன்றாவது இளைஞன் பார்த்தான்.நாமும் தாண்டி போனால் மற்ற ஜனங்கள் பாதிக்கப் படுவார்கள். சிறுவர்கள் மற்றும் பெண்கள் காலில் பட்டால் அவர்களால் வலி தாங்க முடியாது.சிரமப் படுவர்.எனவே இதை அகற்றி விட்டுத்தான் செல்ல வேண்டும் என்று எண்ணினான்.சுற்று முற்றும் தேடினான். ஒரு நீண்ட கழி கிடைத்தது.அதை எடுத்து வந்து முட்கள் அனைத்தையும் அந்த கம்பால் தள்ளிக் கொண்டுபோய் ஒரு ஓரமாக யாருக்கும் இடைஞ்சல் இல்லாத வகையில் ஒதுக்கி வைத்தான்.அதன் பின் நடந்து சென்றான்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த குரு மூவரையும் அழைத்தார்.இந்த முட்களை பரப்பி வைத்து பரீட்சித்ததே அவர்தானே,! மூவரும் சென்றனர்.
மூன்றாவது இளைஞனிடம் உனக்கு மக்கள் நலன் பற்றிய கவலையும், தொலை நோக்கு பார்வையும் மிகுதியாக இருக்கிறது.எனவே அரசனுக்கு உதவியாக அமைச்சரவையில் சேர்த்து கொள்ளும்படி சிபாரிசு செய்கிறேன். மற்ற இருவரிடமும் சுயநலமே மிகுதியாக இருக்குறது.பொது நலன் கொஞ்சமும் இல்லை! இவர்களால் ,மக்களுக்கோ, நாட்டுக்கோ எந்தவித பயனுமில்லை! எனவே இவர்கள் வீட்டிற்கு ்போகலாம் என்று கூறினார்..
இப்போது அந்த குரு ஸ்தானத்தில் வாக்காள பெரு மக்கள் இருக்கிறார்கள்.
அந்த மூன்றாவது இளைஞனைப் போல மக்கள் நலனில் அக்கறையும்,தொலை நோக்கு பார்வையும் உள்ளவர்கள் இப்போதைய அரசியல்வாதிகளில் யார் என்பதை கூர்ந்து பாருங்கள்!
குழந்தைகள் நலன்!
ரசிப்புத் தன்மையும் ஊக்குவித்தலும்!
,################
ரசிப்புத் தன்மை என்பது இயற்கையாகவே அமையக் கூடியது. இல்லாவிடில் நாம் அதை வர வழைத்துக் கொள்ள வேண்டும். .
ஒரு
தாய் தன் மகனுக்கு ஒன்,டூ,திரி என்று சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தாள்.. குழந்தை சொல்ல மறுக்கிறது. தாய்க்கு கோபம் வந்து தன் மகனை பிரம்பால் அடிக்கிறாள்.மகன் அழுகிறானே தவிற ஒன்,டூ், திரி என்று சொல்ல மறுக்கிறான்.பக்கத்து வீட்டில் உள்ள அவள் சிநேகிதி அந்த நேரம் அங்கு வந்தாள். வந்தவள் நிலைமையை புரிந்து கொண்டாள்.
அவள் உடனே அந்த சிறுவனை அருகில் அழைத்து அவன் கண்களையும் ,முகத்தையும் துடைத்து விட்டாள்.
பின்பு அவனிடம் உனக்குத் தான் எல்லாம் நன்றாக தெரியுமே! ஏன் சொல்ல மறுக்கிறாய்? இப்போதுசொல் பார்ப்போம் கெட்டிக்காரன் அல்லவா ,,,!நீ சமர்த்து பிள்ளை ஆயிற்றே .உனக்கு சாக்லெட் தருகிறேன். உம் சொல்லு பார்ப்போம் என்றாள் அவன் ஒன் என்றான் .தாயின் நிநேகிதி உம்! கரெக்ட்டா சொல்லிட்டியே! அடுத்தது சொல் பார்ப்போம் என்றாள் அச்சிறுவன் டூ,திரி என்று டென் வரை சொல்லி விட்டான் .சிநேகிதி அவன் ஒவ்வொன்றையும் சொல்லும் போதும் உம்,உம் என்று சொல்லி அவனை உற்சாகப் படுத்தினாள் ! அவன் தாய்க்கு அதை செய்யத் தெரியவில்லை!
குழந்தைகள் சொல்லும் போது நாம் அதை ரசிக்கிறோம் என்பதை வெளிப் படுத்த வேண்டும். உம்,உம் என்றோ பலே என்றோ எதையாவது சொல்லி நாம் ரசித்து கேட்கிறோம் என்பதை வெளிப் படுத்த வேண்டும்.வாயை திறந்து சொல்லி குழந்தைகளை உற்சாகப் படுத்த வேண்டும்,!
ஒரு வித்துவான் மேடையில் பாடும் போதோ,ஒரு பேச்சாளர் மேடையில் பேசும் போதோ எதிரே இருப்பவர்கள் தலையை ஆட்டியோ, கைகளை தட்டியோ உற்சாகப் படுத்தினால்தான் அவர்களால் சிறப்பாக நிகழ்ச்சியை செய்ய முடியும். பெரிய மனிதர்களுக்கே அப்படி என்றால் சிறுவர்களுக்கு சொல்ல வேண்டுமா! பெரிய மரத்தை விட சிறிய செடிகளுக்குத் தான் பராமரிப்பு அவசியம்.
சிறிய மாணவர்கள் எதில் விருப்பப் படுகிறார்கள் ,எதில் அவர்கள் கஷ்டப் படுகிறார்கள் என்பதை தெரிந்து அதில் அவர்களை உற்சாகப் படுத்தியும்,கஷ்டப்படுவதை எளிமையாக்கியும் அவர்களை உருவாக்க வேண்டியது. ஒவ்வொரு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கடமையாகும்!
வரும்காலம் அவர்கள் கையில் அல்லவா!
Saturday, 27 January 2018
மனிதர்கள் பல விதம்!
குழந்தைகள்தான் வருங்கால தூண்கள்!
##############
குழந்தைகள்,,சிறுவர்கள், பற்றிய விஷயங்கள் படித்தேன். அதில் ஒன்று!
திருமண வீட்டில் பெரியவர்களுக்கு தாம்பூலப் பை கொடுப்பார்கள். சிறுவர்களுக்கு எதுவும் கொடுக்க மாட்டார்கள். ஆனால் சமூக ஆர்வலர் ஒருவரின் திருமண வீட்டில் சிறுவர்களுக்கும் தனியாக பை தயாரித்து அதில் சாக்லெட்,விசில் ,சிறுவர் கதைப் புத்தகம் இவைகளை போட்டு கொடுத்தார்.ஒவ்வொரு சிறுவர்களும் அதை பெறும் போது அவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி இருக்கிறதே ! அதை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. அவர்களையும் மதித்து இவ்வாறு கொடுப்பது சிறுவர்களின் மனதில் தன்னம்பிக்கையையும் தானும் உயர வேண்டும் என்ற எண்ணத்தையும் தருகிறது. விசிலை எடுத்து சிறுவர்கள் ஊதும் போது சத்தம் காதை துளைத்தாலும் எல்லோரும் ரசித்தனர்.ரசிக்க பழகிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு சிறுவர்களை மதித்து ஊக்கப் படுத்தியது மனதிற்கு மகிழ்ச்சியை தந்தது.
இரண்டாவது!
பிறந்து மூன்று மாதமான குழந்தையை உறவினர் ஒருவர் குளோசப்பில் போட்டோ எடுத்திருக்கிறார். அப்போது வெளிப்பட்ட பிளாஷ் வெளிச்சம் பட்டதும் குழந்தையின் கண்ணில் மாறுதல் தெரிந்தது. உடனே கண் மருத்துவரிடம் காட்டினர். அவர் பிளாஷ் லைட்டில் ஒரு கண் பார்வை பறி போய் விட்டது என்று சொல்லி விட்டார்.ஆர்வக் கோளாரில் இது போன்று குழந்தைகளை போட்டோ எடுக்கும் போது அதன் கதிர் வீச்சு அவர்களை பாதிக்கும்.அப்படி அவசியம் எடுக்க வேண்டுமெனில் பிளாஷ் இல்லாமல் தூர நின்று குழந்தையின் கண்ணில் வெளிச்சம் பாதிக்காத வாறு எடுக்க வேண்டும்.
சில விசேஷ வீடுகளில் தாள் வெடி ஒன்றை வெடிப்பார்கள் .அதில் இருந்து கலர் கலர் தாள்களாக சிதறும். கைக்குழந்தையுடன் சில பெண்கள் நிற்பர். அந்த குழந்தைகள் மீது இது பட்டதும் சில குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படுகிறது.
எனவே சிறுவர்களை ஊக்கப்படுத்துவதும், குழந்தைகளுக்கு பங்கம் ஏற்படாதவாறு பார்த்து கொள்வதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும் !
அவர்கள்தானே வருங்கால பாரதத்தின் தூண்கள்!
Friday, 26 January 2018
மனிதர்கள் பல வகை,!
பார்வை!
############
தற்போதுள்ள காலத்தில் எதையும் சுருங்க சொல்லி விளங்க வைப்பது நல்லது.
அரசர் ஒருவரிடம் புலவர் ஒருவர் நான் ராமாயணத்தையும் ,மகா பாரதத்தையும் தங்களுக்கு சொல்கிறேன். என்றார். அரசர் எனக்கு நேரமில்லை. எனவே சுருக்கமாக சொல்ல வேண்டும்.நான் கையில் இருக்கும் பழத்தை உயர போடுவேன்.அப்போது ராமாயணத்தை சொல்ல வேண்டும். அந்த பழம் கீழே என் கைக்கு வருவதற்குள் மகா பாரத்த்தை சொல்ல வேண்டும் என்றார். புலவரும் சரி என்றார். அரசர் பழத்தை மேலே விட்டெறிந்தார். புலவர் பெண்ணால் கெட்டது ராமாயணம் என்றார். பழம் கீழே வரத்தொடங்கியது. உடனே புலவர் மண்ணால் கெட்டது மகா பாரதம் என்றார்.்அரசரும் புலவரின் சமயோசித த்தை மெச்சி பரிசுகள் வழங்கினார்.
இது போல சுருக்கமாக கதை சொல்லக்கூடியவர் சுஜாதா அவர்கள்
ஒரு எழுத்தாளர் ரயிலில் ரிசர்வ் கம்பார்ட் மெண்டில் பயணம் செய்தார்.்அந்த பெட்டியில் மற்றொரு பயணியும் ஏறினார்.அவர் டிப்டாப்பாக உடை அணிந்திருந்தார். வேலையாள் ஒருவர் பெட்டியை கொண்டு வந்து வைத்து விட்டு அவரிடம் விடை பெற்று சென்றார்.ரயில் ஓடத் துவங்கியது. ்அந்த பயணி எழுத்தாளரிடம் கை குலுக்கினார். உடன் நீங்கள் ஒரு எழுத்தாளரா? என்றார் .இவருக்கு வியப்பு. ஆமாம். உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்டார். உங்கள் கை மிகவும் மிருதுவாக இருந்தது. அதனால் எந்த வேலையும் செய்யவில்லை எனத் தெரிந்து கொண்டேன்.அதனால் எழுத்தாளராக இருக்க வேண்டும் என எண்ணினேன் என்றார்.
பேச்சு தொடர்ந்தது. எழுத்தாளர் கேட்டார். நீங்கள் வரும்போது நடையில் வித்தியாசம் தெரிந்தது. ்பார்வைக் கோளாறு உண்டோ என்றார்.்ஆமாம். எனக்கு இரண்டு கண்களும் தெரியாது என்றார்.
பிறவிலேயே உள்ளதா? இடையில் ஏற்பட்டதா? என்று எழுத்தாளர் கேட்டார்.
இது பிறவிலேயே உள்ளது என்றார்.
அந்தப் பயணி இவரிடம் சார்! நான் நிறங்களை பார்த்ததே இல்லை.அதைப் பற்றி சொல்லுங்களேன் என்றார்.
அவரும் ச என்று நான் சொன்னால் பச்சை என்று அர்த்தம்.ரி என்று சொன்னால் சிகப்பு என்று அர்த்தம்.இப்படி ஏழு சுரங்களுக்கும் ஏழு நிறங்களை சொன்னார்.
எல்லாம் கேட்டு முடித்த பின் அந்த பயணி சொன்னார் .சார் நீங்கள் சொன்னது பார்வை உள்ளவர்கள் பார்வை உள்ளவர்களுக்கு சொன்னது .அவர்களால்தான் கண்ணை மூடிக் கொண்டு வந்தாலும் ச என்று சொன்னவுடன் பச்சை நிறம் அவர்கள் கண் முன்னால் விரியும்! ஆனால் நானோ கண் பார்வையே இல்லாதவன்! நான்எப்படி ச என்றதும் பச்சை நிறத்தை தெரிந்து கொள்ள முடியும் என்று கேட்டார்.எழுத்தாளருக்கு தலையில் யாரோ ஓங்கி அடிப்பது போல் இருந்தது. தனது மேதாவித் தனத்திற்கு விழுந்த சம்மட்டி அடியாக நினைத்துக் கொண்டார்.
இந்தக் கதையை கேட்டதும் என் நண்பன் சொன்னான்.
நாட்டின் நிலைமையும் அப்படித்தான் இருக்கிறது. ஆட்சியாளர்கள் வசதி மிக்கவர்களாக இருப்பதால் விலைவாசி உயர்வு,பஸ் கட்டண உயர்வு,மற்றும் இவை போன்றவைகளால் ஏழை மக்கள் படும் துயரத்தை எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் அவர்களால் தெரிந்து கொள்ள முடிய வில்லை! என்றான்.
.