Tuesday, 30 January 2018

குழந்தைகள் நலன்!

ரசிப்புத் தன்மையும் ஊக்குவித்தலும்!
,################
ரசிப்புத் தன்மை என்பது இயற்கையாகவே அமையக் கூடியது. இல்லாவிடில் நாம் அதை வர வழைத்துக் கொள்ள வேண்டும். .
ஒரு
தாய்  தன்  மகனுக்கு ஒன்,டூ,திரி என்று சொல்லிக் கொடுத்து  கொண்டிருந்தாள்.. குழந்தை சொல்ல மறுக்கிறது. தாய்க்கு கோபம் வந்து தன் மகனை பிரம்பால்  அடிக்கிறாள்.மகன் அழுகிறானே தவிற ஒன்,டூ், திரி என்று  சொல்ல மறுக்கிறான்.பக்கத்து வீட்டில் உள்ள அவள் சிநேகிதி அந்த நேரம் அங்கு வந்தாள். வந்தவள் நிலைமையை புரிந்து கொண்டாள்.
அவள் உடனே அந்த சிறுவனை அருகில் அழைத்து அவன் கண்களையும் ,முகத்தையும்  துடைத்து விட்டாள்.
பின்பு அவனிடம் உனக்குத் தான் எல்லாம் நன்றாக தெரியுமே! ஏன் சொல்ல மறுக்கிறாய்? இப்போதுசொல் பார்ப்போம் கெட்டிக்காரன் அல்லவா ,,,!நீ சமர்த்து பிள்ளை ஆயிற்றே .உனக்கு சாக்லெட் தருகிறேன். உம் சொல்லு பார்ப்போம் என்றாள் அவன் ஒன் என்றான் .தாயின் நிநேகிதி உம்!  கரெக்ட்டா சொல்லிட்டியே! அடுத்தது சொல் பார்ப்போம்  என்றாள் அச்சிறுவன் டூ,திரி என்று டென் வரை சொல்லி விட்டான் .சிநேகிதி அவன் ஒவ்வொன்றையும்  சொல்லும் போதும் உம்,உம் என்று சொல்லி அவனை உற்சாகப் படுத்தினாள் ! அவன் தாய்க்கு அதை செய்யத் தெரியவில்லை!
குழந்தைகள் சொல்லும் போது நாம் அதை ரசிக்கிறோம் என்பதை வெளிப் படுத்த வேண்டும். உம்,உம் என்றோ பலே என்றோ எதையாவது சொல்லி நாம் ரசித்து கேட்கிறோம் என்பதை வெளிப் படுத்த வேண்டும்.வாயை திறந்து சொல்லி குழந்தைகளை உற்சாகப் படுத்த வேண்டும்,!
ஒரு வித்துவான் மேடையில் பாடும் போதோ,ஒரு பேச்சாளர் மேடையில் பேசும் போதோ எதிரே இருப்பவர்கள் தலையை ஆட்டியோ, கைகளை தட்டியோ உற்சாகப் படுத்தினால்தான் அவர்களால் சிறப்பாக நிகழ்ச்சியை செய்ய முடியும். பெரிய மனிதர்களுக்கே அப்படி என்றால் சிறுவர்களுக்கு சொல்ல வேண்டுமா! பெரிய மரத்தை விட சிறிய செடிகளுக்குத் தான் பராமரிப்பு அவசியம்.
சிறிய மாணவர்கள் எதில் விருப்பப் படுகிறார்கள் ,எதில் அவர்கள்  கஷ்டப் படுகிறார்கள் என்பதை தெரிந்து அதில் அவர்களை உற்சாகப் படுத்தியும்,கஷ்டப்படுவதை எளிமையாக்கியும்   அவர்களை  உருவாக்க வேண்டியது. ஒவ்வொரு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கடமையாகும்!
வரும்காலம்  அவர்கள் கையில் அல்லவா!

No comments:

Post a Comment