இலவசமும், மக்களும்!
##############
அந்த நாட்டு அரசன் தன்னை புகழ்ந்து பாடி வரும் புலவர்களுக்கு பரிசுகளை வாரி வழங்கினான். அதோடு தன் ஆட்சி நிலைத்திருக்க யாகம் வளர்க்கிறோம்,பூஜை செய்கிறோம் என்று வரும் வேதியர்களுக்கும் வாரி கொடுத்தான். அதனால் கஜானாவில் பணம் குறைந்தது.அமைச்சர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்க வில்லை.துதி பாடிகள் பேச்சைத்தான் கேட்டான். கஜானா காலியானது. அதை நிறப்ப பதிய வரிகளை போட்டான்.மாடு வைத்திருந்தாலும் வரி.குதிரை வைத்திருந்தாலும் வரி.விவசாயம் செய்தாலும் வரி வியாபாரம் செய்தாலும் வரி..இப்படி வரியாகப் போட்டதினால் ,மகிழ்ச்சியாக இருந்த நாடு வறுமையின் பிடியில் வாடத் தொடங்கியது .மக்கள் பெரிதும் அவநி உற்றனர். மன்னனை வசை பாடினர்.
ஒருநாள் மன்னன் இறந்து விட்டான்.
அவன் மகன் அரியணை ஏறினான்.இந்த புலவர்பளும் வேதியர்களும் அவனையும். விடவில்லை.்உன் தகப்பனார் எங்களுக்கு பரிசுகளை வாரி வழங்கினார். அதனால் நீண்ட காலம் ஆட்சி செய்தார். இப்போதும் சொர்க்கத்தில் மகிழ்வோடு இருக்கிறார் என்றனர்.
எனது தந்தை சொர்க்கத்தில் சந்தோசமாக இருக்கிறார் என்று உங்களுக்கு எப்படி தெரியும். நீங்கள் பார்த்தீர்களா என்று கேட்டான்.எங்களுடன் வா .காட்டுகிறோம் என்றனர். அவனை அழைத்துக் கொண்டு மேலோகம் சென்றனர்.
அங்கு அரசனை ஒரு முள் மரத்தில் கட்டி வைத்து நான்கு கிங்கரர்கள் சவுக்கால் அடித்துக் கொண்டிருந்தனர். அரசன் வலி தாங்காமல் அய்யோ அப்பா என்று அலறிக் கொண்டிருந்தான்.
அதைக் கண்ட புலவர்களும்,வேதியர்களும் அந்த கிங்கர்ர்களை நெருங்கி ஏனப்பா அரசனை இப்படி வதைக்கிறீர்கள். அவர் எங்களுக்குஎவ்வளவு தானம் செய்திருக்கிறார் தெரியுமா என்று கேட்டனர்.
அதற்கு கிங்கர்ர்கள் உங்களால்தானய்யா அவருக்கு இந்த நிலமை. உங்களுக்கு வாரி வழங்கி கஜானாவை காலியாக்கி, அதை நிரப்ப வரியாகப் போட்டு மக்களை வாட்டி வதைத்தான் அதற்குதான் இந்த தண்டனை.
இவருக்காவது இவ்வளவுதான் தண்டனை. அவனை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய உங்களுக்கு இதைவிட கடுமையான தண்டனை காத்திருக்கிறது என்றனர்.
அவ்வளவுதான் இளவரசனை விட்டு விட்டு மாயமாக மறைந்து விட்டனர்.
இளவரசன் திரும்பி வந்து இலவசம்,பரிசு இவைகளை அறவே நீக்கினான். வரிகளை குறைத்தான். .மக்கள் மறுபடியும் பழைய நிலைக்கு திரும்பினர்.
இலவசங்களை பெறும் மக்களே! இப்போது அதற்கான தண்டனையை அனுபவித்து கொண்டு இருக்கிறோம். இத்தோடு இலவசங்கள் பெறுவதை நிறுத்தா விட்டால் இதைவிட கடுமையான தண்டனைகளை அனுபவிக்க நேரிடும். நமது சந்ததியினரின் சாபத்திற்கும் ஆளாக நேரிடும்!
Friday, 26 January 2018
உழைப்பும் சிறப்பும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment