Thursday, 11 January 2018

திருமதி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் அவர்களின் உண்ணா நோன்பு!

மதிப்பிற்குரிய திருமதி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் அவர்களுக்கு ,
தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கம் திருநெல்வேலி தெற்கு மாவட்டத்தின் சார்பாக தங்களை கேட்டுக் கொள்கிறோம்.  சூடிக் கொடுத்த சுடற்கொடி ஆண்டாளை பற்றி வைரமுத்து பேசியதற்கு தாங்கள் உண்ணா நோன்பு இருப்பதாக அறிந்து மிகவும் கவலை அடைகிறோம். வைரமுத்து பேசி இந்துக்களின் மனதை புண் படுத்தியதற்கு அனைவரும் கண்டனம் தெரிவிக்கிறார்கள். தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்கள். வைரமுத்து பேசியதின் மூலம் தன்னை தரம் தாழ்த்திக் கொண்டதோடு ஆண்டாள் புகழை உயர்த்தியும் விட்டார். இதுவரை திருப்பாவை படிக்காவர்களையும் படிக்க வைத்து விட்டார். ஆண்டாளின் செயலை,மகிமையை யாரே அறிவர்?
இவர்கள் பேச்சினால் இந்து மதம் வளர்கிறதே ஒழிய ஒரு நாளும்  குறைவதில்லை.
ஏனெனில் இந்து மதத்தின் ஆணி வேர்களாக இருப்பவை வேதங்களும் ,உபநிஷத்துக்களும்,பன்னிரு திருமுறைகளும் அறுபத்து மூன்று நாயன்மார்களும்,பன்னிருஆழ்வார்களும்   பதினெண் சித்தர்களும் ரிஷிகளும், ஞானிகளும்  ஆவார்கள்.இவைகளை தங்களுக்கு நாங்கள் சொல்ல வேண்டியதில்லை.
எனவே தாங்கள் தயவு செய்து உண்ணாநோன்பை கை விடுமாறு அன்போடு  வேண்டுகிறோம்.
தங்களின் சேவை நம் மக்களுக்கு  மிகவும் தேவை.
சட்டபூர்வமாக சந்திக்க வேண்டுமே அன்றி உடலை வருத்த வேண்டாம். உண்ணா நோன்பின் மகிமை தெரிந்தவர்கள் இப்போது எவருமிலர்.
எனவே உண்ணா நோன்பை நிறுத்தி அறிக்கை விட்டு எங்களுக்கு ஆறுதல் அளியுங்கள்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
புளியரை S. ராஜா
மாவட்டத் தலைவர்.
S. கணபதியப்பன்.
மாவட்ட துணைத் தலைவர்.
சைவ வேளாளர் சங்கம். திருநெல்வேலி தெற்கு மாவட்டம்.

No comments:

Post a Comment