Tuesday, 23 January 2018

பித்ருக்களுக்கு வழிபாடு!

தை அமாவாசை வழிபாடு!
************************
இந்துக்கள் ஒரு ஆண்டினை இரண்டு பகுதிகளாக பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உள்ள ஆறு மாதங்களைஉத்தராயன காலம் என்றும்,ஆடி முதல் மார்கழி வரை உள்ள ஆறு மாதங்களை தட்சணாயன காலம் என்றும் அழைக்கின்றனர்.உத்தராயன கால ஆரம்ப மாதமான தை மாதம் வரும் அமாவாசையும்,தட்சணாயன கால ஆரம்ப மாதமான ஆடி மாதம் வரும் அமாவாசையும் பிதுர் வழி பாட்டிற்கும்  முன்னோர்களது ஆசி பெறவும் புண்ணியமான தினம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அமாவாசைகளில் மிக விசேஷமானது தை அமாவாசை ஆகும்.
தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் மகாவிஷ்ணு, சிவ பெருமான்,மற்றும் மூதாதையர்களின் அருளாசியுடன் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்  என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இன்று திருநெல்வேலி வண்ணார்பேட்டை தாமிரபரணி ஆற்றங்கரையில் ஏராளமானோர் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

No comments:

Post a Comment