Tuesday, 23 January 2018

சுதந்திர தியாகம்!

கொடி காத்த குமரன்!
👀👀👀👀👀👀👀👀👀👀👀👀
கொடி காத்த திருப்பூர்  குமரனின் 86 வது நினைவு தினம் நேற்று கொண்டாடப் பட்டது.
அவர்  திருப்பூரை அடுத்த சென்னிமலையில்  திரு.நாச்சிமுத்து,திருமதி கருப்பாயி   என்ற தம்பதியினரின் மகனாக 04-10-1904 ல் பிறந்தார். தனது 19 வது வயதில் ராமாயி அம்மாள் என்பவரை திருமணம் செய்தார். கைத்தறி நெசவு தொழில் செய்து வந்தார். அதில் போதிய வருமானம் கிடைக்காததால்  திருப்பூர் வந்து ஒரு மில்லில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது மகாத்மா காந்தியின் கொள்கைளில் அதிக ஈடு பாடு ஏற்பட்டு  நாட்டு விடுதலைக்காக மகாத்மா காந்தி அறிவித்த போராட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டார்.1932ம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கியபோதுதமிழகம் முழுவதும் அறப் போராட்டம்பரவியது. .திருப்பூரில் தேசபந்துஇளைஞர் மன்ற உறுப்பினர்கள் நடத்திய மறியல் போராட்டத்தில் திருப்பூர் குமரன் தீவீரமாக பங்கு கொண்டு  ,1932 ஜனவரி 10 ம் தேதிஇந்திய தேசிய கொடியினை கையில் ஏந்தி தொண்டர் படைக்கு தலைமை ஏற்று அணி வகுத்து சென்ற போது போலீசாரால் தாக்கப் பட்டு தடியடி பட்டு மண்டை பிளந்து கையில் இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி மயங்கி விழுந்தார்.அப்போதும் போலீசார் தேசியக் கொடியை கீழே போடும்படி அவரை அடித்தனர் . மிதித்தனர். ஆனாலும் அவர் தனது கையில் உள்ள தேசியக் கொடியை விடவில்லை. அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு வைத்து 1932 ஐனவரி 11ம்நாள்  கொடி காத்த குமரன்  உயிர் துறந்தார்.
இவரது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் இந்திய அரசாங்கம் அக்டோபர் 2004ல் சிறப்பு தபால் தலை வெளியிட்டது.
அவரது உடலை அடக்கம் செய்யும் போது அவரது தம்பி ஆறுமுகமும் ,பின்னர்  குமரன் தேசத்தின் பொது சொத்து என்று கூறி  ராஜ கோபால அய்யர்,வெங்கிடாசலம் பிள்ளை,மாணிக்கம் செட்டியார் என பலரும்  இறுதிச் சடங்கினை செய்தனர்.
குமரன் இறந்த ஒரு மாத காலத்திற்குள் மகாத்மா காந்தி அவரது வீட்டிற்கு வந்து அவரது குடும்பத்தார்களுக்கு ஆறுதல் கூறினார்.
தமிழ்நாடு அரசு திருப்பூர் குமரனின் தியாகத்தை போற்றும் வகையில் திருப்பூரில் அவரது நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது.
இன்றைய இளைஞர்களுக்கு சுதந்திரத்திற்காக எத்தனை பேர் எவ்வளவு தியாகங்கள் செய்திருக்கிறார்கள் ,எவ்வளவு பாடு பட்டிருக்கிறார்கள் என்று தெரிந்திருக்க வேண்டியது அவசியம்!

No comments:

Post a Comment