Friday, 26 January 2018

மனிதர்கள் பல வகை !

உறவுகள்!
   ,###########
நான் எனது நண்பன் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது அவனது ஒன்று விட்ட தம்பியும் அவரது மனைவியும் வந்தனர். தனது மகனிடம் இது உனது சித்தப்பா,அது உனக்கு சித்தி என்று அறிமுகப் படுத்தினார். அவன் +1 படிக்கிறான்.
அவன் சித்தப்பா,சித்தி என்றால் என்னப்பா அர்த்தம் என்றான்.
எங்கள் எல்லோருக்கும் முகம் பேய் அறைந்தது போல் ஆகி விட்டது.
நல்லது, கெட்டது எந்த விசேஷத்திற்கும் பிள்ளைகளை அழைத்துச் செல்லாததால் அவர்களுக்கு உறவு முறையே தெரியவில்லை.படிப்பு,படிப்பு என்று இருந்தால். மட்டும் போதாது. உறவுகள் பாசம் இவைகளையும் அவர்களுக்கு  தெரியப்படுத்த வேண்டும்.விசேஷ வீடுகளுக்கு கட்டாயம் அழைத்துச் செல்லுங்கள்.சித்தப்பா,சித்தி,மாமா,அத்தை,தாத்தா,பாட்டி போன்ற உறவுகளை அறிமுகப் படுத்த வேண்டும்.்அந்த உறவுமுறை எப்படி வந்தது என்பதை விளக்க வேண்டும்.
இல்லையெனில் பின்னால் வருந்த நேரிடும். சிந்தியுங்கள்!

No comments:

Post a Comment