Friday, 26 January 2018

மனிதர்கள் பல வகை,!

பார்வை!
     ############
தற்போதுள்ள காலத்தில் எதையும் சுருங்க சொல்லி விளங்க வைப்பது நல்லது.
அரசர் ஒருவரிடம் புலவர் ஒருவர் நான் ராமாயணத்தையும் ,மகா பாரதத்தையும் தங்களுக்கு சொல்கிறேன். என்றார். அரசர் எனக்கு நேரமில்லை. எனவே சுருக்கமாக சொல்ல வேண்டும்.நான் கையில் இருக்கும் பழத்தை உயர போடுவேன்.அப்போது ராமாயணத்தை சொல்ல வேண்டும். அந்த பழம் கீழே என் கைக்கு வருவதற்குள் மகா பாரத்த்தை சொல்ல வேண்டும் என்றார். புலவரும் சரி என்றார். அரசர் பழத்தை மேலே விட்டெறிந்தார். புலவர் பெண்ணால் கெட்டது ராமாயணம் என்றார். பழம் கீழே வரத்தொடங்கியது. உடனே புலவர் மண்ணால் கெட்டது மகா பாரதம் என்றார்.்அரசரும் புலவரின் சமயோசித த்தை மெச்சி பரிசுகள் வழங்கினார்.
இது போல சுருக்கமாக கதை சொல்லக்கூடியவர் சுஜாதா அவர்கள்
ஒரு எழுத்தாளர் ரயிலில் ரிசர்வ் கம்பார்ட் மெண்டில் பயணம் செய்தார்.்அந்த பெட்டியில் மற்றொரு பயணியும் ஏறினார்.அவர் டிப்டாப்பாக உடை அணிந்திருந்தார். வேலையாள் ஒருவர் பெட்டியை கொண்டு வந்து வைத்து விட்டு அவரிடம் விடை பெற்று சென்றார்.ரயில் ஓடத் துவங்கியது. ்அந்த பயணி எழுத்தாளரிடம் கை குலுக்கினார். உடன் நீங்கள் ஒரு எழுத்தாளரா? என்றார் .இவருக்கு வியப்பு. ஆமாம். உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்டார். உங்கள் கை மிகவும் மிருதுவாக இருந்தது. அதனால் எந்த வேலையும் செய்யவில்லை எனத் தெரிந்து கொண்டேன்.அதனால் எழுத்தாளராக இருக்க வேண்டும் என எண்ணினேன் என்றார்.
பேச்சு தொடர்ந்தது. எழுத்தாளர் கேட்டார். நீங்கள் வரும்போது நடையில் வித்தியாசம் தெரிந்தது. ்பார்வைக்  கோளாறு உண்டோ என்றார்.்ஆமாம். எனக்கு இரண்டு கண்களும் தெரியாது என்றார்.
பிறவிலேயே உள்ளதா? இடையில் ஏற்பட்டதா? என்று எழுத்தாளர் கேட்டார்.
இது பிறவிலேயே உள்ளது என்றார்.
அந்தப் பயணி இவரிடம் சார்! நான் நிறங்களை பார்த்ததே இல்லை.அதைப் பற்றி சொல்லுங்களேன் என்றார்.
அவரும் ச என்று நான் சொன்னால் பச்சை என்று அர்த்தம்.ரி என்று சொன்னால் சிகப்பு என்று அர்த்தம்.இப்படி ஏழு சுரங்களுக்கும் ஏழு நிறங்களை சொன்னார்.
எல்லாம் கேட்டு முடித்த பின் அந்த பயணி சொன்னார் .சார் நீங்கள் சொன்னது பார்வை உள்ளவர்கள் பார்வை உள்ளவர்களுக்கு சொன்னது .அவர்களால்தான் கண்ணை மூடிக் கொண்டு வந்தாலும் ச என்று சொன்னவுடன் பச்சை நிறம் அவர்கள் கண் முன்னால் விரியும்! ஆனால் நானோ கண் பார்வையே இல்லாதவன்! நான்எப்படி ச என்றதும் பச்சை நிறத்தை தெரிந்து கொள்ள முடியும் என்று கேட்டார்.எழுத்தாளருக்கு தலையில் யாரோ ஓங்கி அடிப்பது போல் இருந்தது. தனது மேதாவித் தனத்திற்கு விழுந்த சம்மட்டி அடியாக நினைத்துக் கொண்டார்.
இந்தக் கதையை கேட்டதும் என் நண்பன் சொன்னான்.
நாட்டின் நிலைமையும் அப்படித்தான் இருக்கிறது. ஆட்சியாளர்கள் வசதி மிக்கவர்களாக இருப்பதால் விலைவாசி உயர்வு,பஸ் கட்டண உயர்வு,மற்றும் இவை போன்றவைகளால் ஏழை மக்கள் படும் துயரத்தை எவ்வளவு எடுத்துச் சொன்னாலும்  அவர்களால் தெரிந்து கொள்ள முடிய வில்லை! என்றான்.
.

No comments:

Post a Comment