கார்ப்ரேட்,மற்றும் கம்பெனி நிர்வாகிகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!
👀👀👀👀👀👀👀👀👀👀👀👀
நீங்கள் உங்கள் நிறுவனங்களுக்கு வேலைக்கு மாணவர்களை தேர்வு செய்வதற்கு ஒரு நடைமுறை வைத்திருக்கிறீர்களே அது சரிதானா?
அதாவது பொறியியல் மற்றும் பல துறைகளில் அரியர் வைக்காமல் பாஸ் செய்தவர்களை தேர்ந்தெடுப்பது என்றும், அரியர் வைத்து பாஸ் செய்திருந்தால் அவர்களை இன்டர்வியூவுக்கே அழைப்பதில்லை என்றும் கவைக்கு உதவாத ஒரு பாலிசியை வைத்திருக்கிறீர்களே அது எந்த விதத்தில் நியாயம். அதிலும் எங்கள் கம்பெனியில் உள்ள கம்யூட்டர் அரியர் இருந்தால் அவர்களது அப்ளிகேஷன்களை அதுவே ரிஜக்ட் செய்வதாக சில மேதாவிகள் சொல்கிறார்கள். அது உண்மையா என்று தெரியவில்லை.
அதாவது அரியர் இல்லாமல் பாஸ் செய்திருந்தால் அவன் மிகப்பெரிய அறிவாளி என்றும் ,அரியர் வைத்து பாஸ் செய்தவர்கள் திறமை அற்றவர்கள் என்றும் நீங்கள் எண்ணுவதாக தெரிகிறது.
திறமை என்பது மனப்பாடம் செய்து ஒரே அட்டம்டில் பாஸ் செய்வது அல்ல,!
பொதுவாக இப்போதுள்ள கல்வி முறை வாழ்க்கைக்கு சிறிதும் பயனற்றது.
சின்ன வகுப்பில் படிக்கும் மாணவச் செல்வங்கள் எத்தனை பேர் எத்தனை கருவிகளை கண்டு பிடித்திருக்கிறார்கள்.புதிய ஆராய்ச்சிகள் செய்து கொண்டுஇருக்கிறார்களே! அவர்கள் எந்த முதல் கிளாஸி்ல் பாஸ் செய்திருக்கிறார்கள்.
பாஸ் மார்க்கை மதிப்பிடாதீர்கள். திறமையை மதிப்பிடுங்கள்.
மனப்பாடம் செய்து முதல் மார்க்கு வாங்கியவர்கள் கண்களை மறைத்த குதிரைக்கு சம்மானவர்கள்.அவர்கள் பார்வை ஒரே நோக்கில்தான் இருக்கும்.ஆனால் திறமை உள்ளவர்கள்தான் கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப,,அடுத்த கம்பெனிகளின் வியாபார தந்திரங்களுக்கு ஏற்ப தான் வேலை பார்க்கும் கம்பெனியை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியும்.
எனவே கம்பெனி நிர்வாகிகளே ஒரே அட்டம்டில் பாஸ் செய்திருக்க வேண்டும் என்ற பழைய பல்லவியை பாடாமல் அனைவரையும் இன்டர்வுயூக்கு அழையுங்கள்.அவர்களை திறமையை பரிசோதியுங்கள் .
அவர்களை தேர்ந்தெடுங்கள்.
புதிதாக சிந்தியுங்கள்! புதிய உலகை படைத்திடுங்கள்.
Monday, 1 January 2018
மனப்பாடம் செய்தால்தான் திறமையா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment