சுரண்டை ஸ்ரீ அழகு பார்வதி அம்மன் கோவிலில் 3008 திருவிளக்கு பூஜை!
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
சுரண்டை அருள்மிகு அழகு பார்வதி அம்மன் கோவிலில் நேற்று (29-12-17) மாலை திருவிளக்கு பூஜை நடை பெற்றது.அந்த கண் கொள்ளா காட்சியை பார்க்க கோடி கண்கள் வேண்டும். 3008 பேர்கள் விளக்கு பூஜை என்று கூறி இருந்த போதிலும் 5000 பெண்களுக்கு மேல் வந்திருந்தனர்.வானத்து நட்சத்திர கூட்டமே அழகு பார்வதி அம்மன் கோவிலுக்கு வந்து விட்டதை போல எங்கு பார்த்தாலும் பெண்கள் கூட்டமே!
இந்திரன் மயனை அனுப்பி பந்தல் அமைத்திருப்பார் போலும்.தமிழகமே திரண்டு வந்தாலும் அமரக் கூடிய அளவு அவ்வளவு பெரிய பந்தல் .அதில்நிகழ்ச்சி நிறைவு பெற்று செல்லும் போது நெருக்கடி ஏற்படாமல் இருக்க நான்கு புறமும் அகன்ற வாசல்.
மாலை 5-30 மணிக்கு நாதஸ்வர இசையுடன் நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது.
அதன் பின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடை பெற்றது.
முகப்பு வாசலில் திருவிளக்கு பூஜை கமிட்டி துணைத்தலைவர் உ. சுப்பு மாணிக்க வாசகம் அவர்கள் தலைமையில் உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்று பொன்னாடை அணிவித்து அமரச்செய்தனர்.
அவ்வளவு பெரிய பந்தலையும் கடந்து கோவிலுக்குள்ளும் இடம் போறாது என்று அருகில் உள்ள திருமண மண்டபத்திலும் பெண்கள் திரு விளக்குடன் வந்து நிறைந்து அமர்ந்து திருவிளக்கு பூஜை செய்தனர்.கமிட்டி செயலாளர் P.ஆறுமுகச்சாமி வந்திருந்தவர்களை வரவேற்று,பெண்கள் அனைவரையும் திரு விளக்கு பூஜையிம் மனம் ஒருமுகப் படுத்தும் விதமாக பேசினார்.
சிறிது நேரத்தில் திருக்குற்றாலம் ஐந்தருவி ஸ்ரீ சுவாமி விவேகானந்த ஆஸ்ரமம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அகிலானந்தஜீ அவர்கள் தலைமையில் மற்றும் இரு சந்நிதிகளும் வந்தனர். அவர்களுக்கு பூர்ண கும்ப மரியாதை செய்யப்பட்டது.அவர்கள் அம்மனை வணங்கி விட்டு மேடைக்கு வந்தனர். பாளை அய்யப்பா டிரான்ன்ஸ் போர்ட் அதிபர் புளியரை S.ராஜா, மூத்த குடி மக்கள் திருநெல்வேலி மாவட்ட செயலாளர்எஸ். கணபதியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு ஆதீனங்களுக்கு பழங்கள்,மாலைகள் அளித்து மரியாதை செய்தனர்.
கோவிலில் இருந்து உற்சவ மூர்த்திகளான ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ முருகன்.ஸ்ரீ அழகு பார்வதி அம்மன் ஆகிய தெய்வங்களை மேடையில் எழுந்தருளி செய்தனர்.
பூஜைகள் முடிந்து ,ஆதீனங்கள் ஆசிகள் வழங்கியவுடன் பெண்கள் அனைவரும் ஆகம விதிகள் படியும் சாஸ்திர சம்பிரதாயங்கள் படியும் திரு விளக்கு ஏற்றி ஸ்துதிகள் கூறி பூஜைகள் செய்தனர்.முப்பத்து முக்கோடி தேவர்களும் நிச்சயம் வானில் இருந்து பார்த்து மகிழ்ந்து ஆசி கூறி இருப்பர்.
இத்துணை ஏற்பாடுகளையும் மிகச் சிறப்பாக செய்த கமிட்டி தலைவர் S. செல்லத்துரை,துணைத்தலைவர் U. சுப்பு மாணிக்கவாசகம்,செயலாளர் P. ஆறுமுகச்சாமி மற்றும் உறுப்பினர்கள் அனைவரைக்கும் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்!!
Friday, 29 December 2017
திருவிளக்கு பூஜை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment