நாகரீகம்!
************
எனது நண்பரின் மகனுக்கு பெண் பார்க்க நானும் உடன் சென்றேன்.
நாங்கள் பெண்ணின் தகப்பனாருடன் பேசிக் கொண்டிருந்தோம்.சிறிது நேரத்தில் பெண்ணின் தாயார் இரு தம்ள ர்களில் காபி கொண்டு வந்தார்.
எனது நண்பன் காபி குடிக்கும் வழக்கமில்லை என்று கூறி விட்டான்.அந்த அம்மாவிற்கு முகம் ஒரு மாதிரி ஆகி விட்டது.
நானும் காலையில் ஒரு நேரம் ,மாலை ஒரு நேரம் மட்டுமே காபி குடிப்பேன் இடையில் காபி குடிக்க மாட்டேன்.அதுவும் சீனி சேர்க்க மாட்டேன். இந்த நிலையில் நானும் காபி வேண்டாம் என்றால் அந்த அம்மா மனம் மிகவும் வேதனைப் படும்.அதோடு பெண்ணின் அப்பாவும் அந்த அம்மாவை ஏன் அவர்களை கேட்காமல் காபி போட்டாய் என்று கண்டிப்பார்.
இதனை எல்லாம் யோசித்து நான் காபியை வாங்கி குடித்து விட்டேன்.இனிப்பு கூடுதலாக இருந்தது. அதை வெளிக் காட்டவில்லை.
இருவரும் விடை பெற்று வெளியே வந்தோம்! இந்த மாதிரி நேரங்களில் நாம் சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
முதலில் இந்த அம்மா இருவரிடமும் காபி சாப்பிடுவீர்களா, கொண்டு வரட்டுமா ,என்றும் சீனி சேர்க்கலாமா என்றும் கேட்டிருக்க வேண்டும். அந்த அம்மா ஏதோ மரியாதைக்கு கொண்டு வந்து விட்டது.
நண்பனாவது காபி குடிக்க மாட்டான் என்றாலும் கூட மரியாதைக்காகவாவது அரை தம்ளராவது வாங்கி குடித்திருக்கலாம்.
கடைசியில் நாகரீகம் கருதி சீனி போட்ட காபியை வாங்கி நான் குடித்து விட்டு வீட்டில் வந்து சுகர் மாத்திரையும் ஜெலிசுலும் சாப்பிட்டேன்.
Wednesday, 27 December 2017
மனிதர்களில் எத்தனை வகை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment