வாழ்க்கையா? வருமானமா?
எனது நண்பனின் தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்க நானும் உடன் சென்றேன். அவர் கோயம்புத்தூரில் வேலை பார்த்து வந்தார். அவரின் மேலதிகாரி எனக்கு தெரிந்தவர். அவர் எங்களை வரவேற்று மாப்பிள்ளை நல்ல பையன். கெட்ட பழக்கம் எதுவும் கிடையாது. அதனால் பேசி முடித்து விடுங்கள் என்றார். அதே போல் மாப்பிள்ளையிடமும் ,வந்திருப்பது நல்ல குடும்பம். எனக்கு நன்கு தெரிந்தவரின் நண்பனின் தங்கை. எனவே இதை முடித்து விடுங்கள் என்று கூறி இருக்கிறார்.
ஆனால் இதற்கு முட்டுக்கட்டை போடுவது மாப்பிள்ளையின் சித்தி என்பதை அறிந்து கொண்டேன். மாப்பிள்ளைக்கு அப்பா,அம்மா இல்லை. சித்தியின் பராமரிப்பில் இருக்கிறார். இவருக்கு திருமனம் ஆகி விட்டால் தனக்கு செலவுக்கு தரமாட்டான் என்று எண்ணி திருமணத்தை தள்ளி போட்டு வந்திருக்கிறார்.
நான் மாப்பிள்ளையை தனியே அழைத்துச் சென்று பேசினேன்.தம்பி! உங்களுக்கு இப்போதே வயது முப்பது ஆகி விட்டது.ஓய்வு பெற இன்னும் 28 வருஷம் தான் இருக்கிறது. இப்போது திருமணமாகி அதுவும் பெண் குழந்தை பிறந்தால் அதை வளர்த்து ஆளாக்கி அதை கட்டி கொடுப்பதற்கும் நீங்கள் ரிட்டயர்டு ஆவதற்கும் சரியாக இருக்கும்.உங்கள் பிற்காலத்திற்கும் சேர்த்து வைக்க வேண்டும். அதனால் தான் காலத்தே பயிர் செய் என்று பெரியோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.பிற் காலத்தை பற்றி கணக்கிட்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாவிட்டால் பின்னால் சங்கடப்பட நேரிடும். உங்கள் சித்தியை என் நண்பனின் தங்கை நன்றாக கவனித்துக் கொள்ளுவாள் .அதைப் பற்றி கவலைப் பட வேண்டாம் என்றேன். நான் சொன்னதின் நியாயங்கள் அனைத்தையும் புரிந்து கொண்டார்.
தன் சித்திக்கு இந்த இடத்தை உடனே பேசி முடிக்கமாறு கடிதம் எழுதி கொடுத்தார்.
திருமணமும் இனிதே முடிந்தது. சித்தியும் அவர்களுடன் சந்தோசமாக இருக்கிறாள். அவர் ரிட்டயர்டு ஆகு முன்பே அவர் மகளுக்கு திருமணம் ஆகி விட்டது.
ஆணோ,பெண்ணோ பிள்ளைகளின் சம்பளத்தை வைத்து காலம் கழிக்கும் பெற்றோர்களே அதற்காக அவர்களின் திருமணத்தை தள்ளி போடாதீர்கள்! அவர்கள் வாழ்க்கை வீணாகி விடும்.கடவுளை நம்புங்கள்.அவர் கை விடமாட்டார்.நல்லதை எண்ணினால் நல்லதே நடக்கும். இறைவனும் பிள்ளைகளும் உங்களுக்கு ஆதரவாகவே இருப்பார்கள்.இறைவனை நம்பினவர்கள் யாரும் கைவிடப் படுவதில்லை!
.

No comments:
Post a Comment