கட்டுப்பாடு!
👀👀👀👀👀
இந்த வார்த்தையில் பிரபஞ்சமே அடக்கம்.இது வெறும் வார்த்தை அல்ல. இது ஒரு மந்திரச் சொல்.வேத சாஸ்திரங்களில் எவ்வளவு அர்த்தம் இருக்கிறதோ,எவ்வளவு சக்தி இருக்கிறதோ அவ்வளவு அர்த்தமும்,சக்தியும் இந்த வார்த்தையிலும் இருக்கிறது.
உணவில் கட்டுப்பாடு,உடையில் கட்டுப்பாடு, நடத்தையில் கட்டுப்பாடு என்று நமக்கு நாமே கட்டுப்பாட்டை வகுத்துக் கொண்டால்,எல்லைக் கோட்டை அமைத்துக் கொண்டால் நாட்டில் காவல் நிலையமும் தேவை இல்லை. நீதிமன்றமும் தேவை இல்லை.
காஞ்சி பெரியவரின் காலத்தில் நடந்தவைகளை படிக்கும் போது பிரமிப்பாக இருக்கிறது.அவரால் எல்லாம் செய்ய முடியும். ஆனால் அவர் காமாட்சியை வணங்கு.திருப்பதியில் திருக்கல்யாணம் செய்து வை.என்று ஒவ்வொரு கோயிலுக்கும் சென்று முறையிடச் சொல்லுகிறார். அவ்வாறு செய்ததும் அந்த காரியம் நடபெற்று விடுகிறது.தெய்வத்தின் பிரதிநிதியாக தான் இருந்தாலும் அந்த தெய்வம் மூலம் நடந்ததாக மக்களுக்கு அறிவுறுத்துகிறார்.அது தனக்கு விதித்த கட்டுப்பாடு.
கடல் நான்கு கரைகளுக்குள் அடங்கி இருப்பதும், நதி இரு கரைகளுக்குள் அடங்கி ஓடுவதும் யானை பாகனுக்கு அடங்கி நடப்பதும்,விலங்குகள் வனத்திலேயே இருப்பதும் எல்லாம் கட்டுப் பாடுகளே ! பூமித்தாய் தன் கட்டுப்பாட்டை இழந்தால் சுனாமி,புயல்,பூகம்பம்,எரிமலை வெடித்தல் எல்லாம் நடக்கிறது.
கட்டுப்பாட்டை மீறும் போது நிதானம் பிறழ்கிறது.உண்மை கசக்கிறது் பொய்மை இனிக்கிறது.நண்பன் விரோதி ஆகிறான். விரோதி நண்பனாக தெரிகிறான்.மானமும் மரியாதையும் காற்றில் பறக்கிறது. ஊழலும் லஞ்சமும் நியாமாக தெரிகிறது.
எனவே கட்டுப் பாடு என்ற தாரக மந்திரத்தை நமக்கு நாமே உச்சரிப்போம்.லட்சுமணன் கோடு என்ற எல்லைக் கோட்டை வகுத்து அதை தாண்டாமல் இருப்போம்.தர்மம் தழைக்கட்டும்.! தமிழகம் வாழட்டும்!!
Monday, 4 December 2017
மனித மனங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment