துணைவன்(வி)!
,*************,**********
அந்தக் காலத்தில் மாப்பிள்ளயை விட பெண்ணுக்கு ஐந்து அல்லது ஆறு வயது குறைவாக உள்ள பெண்ணையே பேசி முடிப்பார்கள்.காரணம் ஆண்களுக்கு வயதாகி முதுமை அடையும் போது பெண்களுக்கு குறைவான வயதாக இருந்தால்தான் ஆண்களுக்கு உதவியாக இருக்க முடியும்.உறு துணையாக இருக்க முடியும் என்ற முன் யோசனையால்தான்.அது காலப்போக்கில் ஒன்று அல்லது இரண்டு வயது வித்தியாசம் ஆகி இப்போது சம வயதிலேயே திருமணம் செய்கிறார்கள்
ஆனால் எத்தனை வயது வித்தியாசம் இருந்தாலும் பெண்கள் சீக்கிரமே முதுமை அடைந்து விடுகிறார்கள். அந்தக் காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் பத்து பிள்ளைகள் இருப்பார்கள். பத்தாவது ஆணாக இருந்தால் பரமசிவன் என்றும் பெண்ணாக இருந்தால் பார்வதி என்றும் பெயரிட்டு முற்று புள்ளி வைப்பார்கள்.ஆனால் எத்தனை பிள்ளைகள் பெற்றாலும் பெண்கள் திடகாத்திரமாவும்,உடல் உறுதியுடனும் ,சுறுசுறுப்புடனும் இருந்தார்கள். அதற்கு காரணம் அவர்கள் அம்மி அரைத்தார்கள்,தோசைமாவு ஆட்டினார்கள்,உரலில் பொடிகள் இடித்தார்கள் ,தண்ணீர் குடம் சுமந்தார்கள்,வீடு பெருக்கி கோலம் இட்டார்கள்.இப்படி உடல் உழைப்பு இருந்ததினால் பிரசவம் எளிதாக இருந்தது.
இப்போது மிக்சி, கிரைண்டர்,வாசிங் மெசின், இவைகள் எல்லாம் வந்து உடல் உழைப்பை கெடுத்து விட்டது. வீடு பெருக்குவதற்கு கூட குனியாமல் பெருக்குவதற்கு நீளமான கம்பு உள்ள துடைப்பம் உள்ளது.
ஆக முதல் குழந்தைக்கே சிசேரியன் ஆபரேசன் செய்ய வேண்டிய நிலை பெண்களுக்கு வந்து விட்டது.அது பெண்களை மிகவும் பலவீனமாக்கி விடுகிறது. அதற்கு மாத்திரை மருந்து என்று சாப்பிட்டு முதுமையை விரைவில் வர வழைத்து விடுகிறது.ஆண்களை விட பெண்கள் சீக்கிரம் முதுமை அடைந்து விடுகிறார்கள். கடைசியில் ஆண்களுக்கு பெண்கள் உதவியாக இருக்க வேண்டிய நிலைமாறி பெண்களுக்கு ஆண்கள் உதவி செய்ய வேண்டிய நிலை வந்து விட்டது.
இது கால மாற்றத்தால் வந்த செயல்.
Tuesday, 12 December 2017
தேவையான உதவி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment