பெண்களின் மாண்பு!
,********************
நண்பனின் வீட்டிற்கு இன்று சென்றிருந்தேன். அப்போது மழை பெய்ய தொடங்கியது. அந்த நேரத்தில் வயதான பெண்மணி ஒருவர் முருங்கைக் கீரை விற்றுக் கொண்டு அங்கு வந்தாள். ஒரு கட்டு ஏழு ரூபாய் சொன்னாள். நண்பனின் மனைவி ஐந்து ரூபாய்க்கு கேட்டாள்.. கீரைக்காரி ஏழு ரூபாய்க்கு குறையாது என்றாள்.நண்பனின் மனைவி மறுப்பேதும் சொல்லாமல் பதினான்கு ரூபாய்க்கு இரண்டு கட்டு வாங்கி பணத்தை கொடுத்தாள். .மழை குறையவில்லை.
மழை நிற்கட்டும். அதுவரை உட்காரு என்று சொல்லி விட்டு நண்பனின் மனைவி உள்ளே சென்றாள். வரும் போது அவள் தட்டு ஒன்றில் நான்கு இட்டிலிகளும் சட்னியும் எடுத்து வந்து கீரைக்காரி யிடம் கொடுத்தாள். இது எதற்கு அம்மா என்றாள் கீரைக்காரி. காலையில் நீ சாப்பிட்டிருக்க மாட்டாய்.பரவாயில்லை.சாப்பிடு என்றாள்.
கீரைக்காரி சாப்பிட்டாள். அதற்குள் ஒரு தம்ளரில் சூடான காபி கொண்டு வந்து கொடுத்தாள். கூச்சப் பட்டாலும் காபியை.வாங்கி குடித்தாள்.
மழை நிற்க தொடங்கியது. கீரைக்காரி எழுந்தவள் இரண்டு முருங்கைக் காய்களை எடுத்து நண்பனுன் மனைவியிடம் கொடுத்து இதை வச்சுக்குங்கம்மா என்றாள்.கீரை வாங்கி விட்டேன் . முருங்பைக் காய் வேண்டாம் என்றாள்.காசு வேண்டாம் அம்மா.நானாக தருகிறேன் என்றாள்..காசை பத்தி ஒண்ணும் இல்லை அம்மா.வேண்டும் எனில் நானே காசு கொடுத்து வாங்கிடுவேன். காய் இப்போது இருக்கிறது. அதனால் வேண்டாம் என்று கூறியவள் சரி நீ போய்வா என்றாள்..கீரைக்காரியிடம் சாப்பிட்டு விட்டு சும்மா போக்க்கூடாது என்ற எண்ணமும்,நண்பனின் மனைவியிடம் சாப்பாடு கொடுத்து விட்டு அதற்கு பிரதி பலனாக எதையும் பெற்று விடக் கூடாது என்ற எண்ணமும் மேலோங்கி நின்றது.
முதலில் கறாராக பேசிய கீரைக்காரி இப்போது இரண்டு காய்களை இலவசமாக கொடுக்க முன் வருகிறாள்.
நண்பனின் மனைவியோ முதலில் விலையை குறைத்து கேட்டாலும் அவள் நிலை அறிந்து அவள் சொன்ன விலைக்கே வாங்கியதுடன் உணவும் கொடுத்து உபசரிக்கிறாள்.இதை பார்த்து நானும்
நண்பனும் சிரித்துக் கொண்டோம்.
காலம் எவ்வளவு மாறினாலும் தமிழக பெண்களின் மாண்பு என்றும் மாறாது என்பதை தெரிந்து கொண்டோம்.
வாழ்க தாய்மார்கள்! வளர்க அவர்களின் மாண்பு!
Friday, 1 December 2017
பெண்களின் மாண்பு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment