மூத்த குடிமக்களின் கோரிக்கை!
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் நல உரிமைச் சங்கம் திருநெல்வேலி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பென்சன் பெறாத முதியவர்களுக்கு மாதம் ₹3000/- ஓய்வூதியம் வழங்க வேண்டும் ,முதியோர்கள் நலனுக்கென தனி இலாகா அமைக்க வேண்டும்,மருத்துவ காப்பீடு திட்டத்தை மக்களுக்கு பயன் படும் வகையில் சீர்திருத்தி அமைக்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு நிலுவைத் தொகையினை உடன் வழங்க வேண்டும் என தமிழக அரசை கேட்டு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
இச்சங்கத்தின் இருபதாம் ஆண்டு நிறைவு விழாவை சிறப்பாக கொண்டாட ஒத்துழப்பு நல்கும்படி எல்லா மாவட்ட நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இன்றைய தினமலரில் இச்செய்தி வந்துள்ளது. அவர்களுக்கு நன்றி!
முதியோர்களே! ஒன்று படுவோம். உயர்வு பெறுவோம்.
சிவ சோமநாதன்.
மநிலத் தலைவர்.
எஸ் .கணபதியப்பன். மாவட்ட செயலாளர்.
கே.எஸ். ஆறுமுகம் மாநில பொருளாளர்.
Wednesday, 3 January 2018
முதியோர் நலன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment