Wednesday, 31 January 2018

மனித மனம்!

அரசாங்க பதவி!
##############
எனது நண்பர் ஒருவர் அரசாங்கத்தில் உயர்ந்த பதவியில் இருந்தார்.அவருக்கு தன் தலை மேல்தான் அந்த அலுவலகம் நடக்கிறது என்ற ஓர் எண்ணம். காலையில் 9 மணிக்கு அலுவலகம் போய்விடுவார். இரவு 9மணிக்கு தான் வீட்டிற்கு திரும்புவார்.உறவினர் வீட்டு விஷேசங்களுக்கு கூட லீவு போட மாட்டார்..விஷேசங்களுக்கு போக மாட்டார்.
அவருக்கு 60 வயதில் ஓய்வு கொடுத்து விட்டார்கள். இப்போதும் இவர் இல்லாமல் அந்த அலுவலகம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.ஆனால் இவர்தான் தான் இல்லாமல் நடக்காது என்று நினைத்து மாடாய் உழைத்து உடம்பை கெடுத்துக் கொண்டார்.மாடாய் உழைக்காமல் மனிதனாய் உழைத்தாலே போதும்.யாரும் உங்களுக்கு கிரீடம் தரப் போவதில்லை!
அரசாங்கம் என்ற மெசின்உங்கள்  உழைப்பை உறிஞ்சி சக்கையாய் வெளியே வீசி விட்டது. இப்போது அந்த அலுவலகமும் அவரை மறந்துவிட்டது. உறவினர்கள் வீடுகளுக்கு போகாததால் அவர்களும் மறந்து விட்டனர்.
எனவே இம்போதுள்ள நண்பர்களே உங்களால்தான் ஆபீஸ் நடக்கிறது என்று எண்ண வேண்டாம் .நீங்கள் இல்லாவிட்டால் வேறொருவர் நடத்துவார்.அன்றன்றுள்ளவேலையை ஒழுங்காக செய்யுங்கள்.பைல்களை தேங்க விடாதீர்கள்.மக்கள் சேவகன் என்ற நினைப்பை மனதில் வைத்து ஏழை எளிய மக்கள் அலுவலகத்திற்கு வந்தால்  அவர்களை மதித்து  உதவி புரியுங்கள். உறவினர்கள் விஷேங்களுக்கு மகிழ்வுடன் சென்று வாருங்கள்.
வாழ்க்கையை அனுபவியுங்கள்.
.

No comments:

Post a Comment