Monday, 1 June 2020

மறக்க முடியாத நினைவுகள்

தொல்லையின் எல்லை!
💧💧💧💧💧💧💧              எனது நண்பன் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறான். அவனது அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.
டாக்டர்கிட்ட காட்டிட்டு இருக்க வேண்டியதுதான. சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தஆண்டியாக  அப்பாவுக்கு உடம்பு சரியில்லன்னு ஊர்ல உள்ள உறவினர்களுக்கு தகவல் கொடுத்துட்டான். உறவினர்களும்இருபது பேர் புறப்பட்டு வந்துட்டாங்க.
ஆனால் அவன் அப்பாவுக்கஇழுத்து கிட்டே இருக்கு . போக மாட்டேங்குது. வந்தவர்களும் போக மாட்டேங்குறாங்க. பார்த்துட்டு தான் போவோம் கிறாங்க. வந்தவங்களுக்கு மூனு வேளையும் சமைச்சு போட்டு. நண்பன் ஓஞ்சி போனான். மறுநாளே ஊரடங்கு உத்தரவு போட்டுவிட்டான் ரயிலும் நிப்பாட்டிட்டான்
ஆஸ்பத்திரியை யும் அடச்சிட்டான்.. ஆஸ்பத்திரி இல்லாததால அவன் அப்பாவை கூட்டிட்டு போய் காட்ட முடியல. அதனால அவன் அப்பா வாயில  மூக்கில குழாய்களைச் செருகி  ஐ.சி யூ வார்டுல சேக்காததால அவரை குணமாகி  எந்திரிச்சு உக்காந்து நடமாட ஆரம்பிச்சுட்டாரு .வந்தவங்க பார்த்தாங்க நாங்க ஊர் சுத்தி பார்த்துட்டு வாரோம்  அப்படின்னுட்டு போனவங்கதான். அவங்கள அங்கங்க பிடிச்சு தனிமை படுத்தி வச்சுட்டாங்க.  இப்ப அவங்க எங்க இருக்காங்கன்னு தெரியல. என்ன செய்யுறாங்க கனும் தெரியல. ஒரு தகவலும் தெரியல. போனையும் பிடுங்கி வச்சு கிட்டதால பேசவும் முடியல. நண்பனுக்கு பைத்தியம் பிடிச்சிடும்னு  நினைக்கிறாங்க.     
🛋️🛋️🛋️🛋️🛋️🛋️🛋️

No comments:

Post a Comment