தென்காசி தாலுகாவில் இருந்து தற்போது வீரகேரளம்புதூர் தாலுகாவில் உள்ள சுரண்டை முன்பு சிறு கிராமமாக இருந்தது.இப்போது பெரிய டவுணாக மாறி விட்டது. முன்பு ஆர்.ஸி.ஆரம்பபள்ளி, ஜவகர் ஆரம்ப பள்ளி, TDTA ஆரம்ப பள்ளி மற்றும் பேரன் புரூக் உயர்நிலை பள்ளி என இவைகள்தான் இருந்தன .இன்று கல்லூரி வந்து விட்டது .முன்பு வீரகேரள. ம்புதுரில் இருந்து ஒரு டாக்டர் மட்டும் வந்து போவார் .. இப்போது பெரிய பெரிய மருத்துவ மனைகள் பல வந்து விட்டன .
அந்த ஊரின் பெயர் காரணம் பற்றி பலர் பல விதமாக சொல்வார்கள் .ஆனால் அதற்கு ஒரு வரலாறு உண்டு.சுரர்கள் அண்டையில் வாழ்ந்த சுரண்டை மாநகரம் வாழ்க என்று ஒரு பாடல் இருப்பதாக கூறுவார்கள் .அதாவது சுரர்கள் என்றால் ராமனுடைய படைகள் .அசுரர்கள் என்றால் ராவணனுடைய படைகள் .ராமனுடைய படைகள் அருகில் தங்கி இருந்ததால்தான் சுரர்கள் +அண்டை =சுரண்டை எனபெயர் வந்ததாக கூறுவார்கள் . அதனால்தான் அங்கு ஓடும் நதிக்கு அனுமன் நதி என்று பெயர் .
இந்த ஊருக்கு மேற்கே நான்கு கிமீ தூரத்தில் சாம்பவர்வடகரை என்ற ஊர் இருக்கிறது .ஜாம்புவர் என்பதுதான் சாம்பவர் என மருவி விட்டது .கிழக்கே ஆலங்குளத்திற்கு வடக்கே மாயமான் குறிச்சி என்ற ஊர் இருக்கிறது.ஆக ராமாயண சம்பந்தப்பட்ட பெயர்களாக அமைந்திருப்பது நமக்கெல்லாம் பெருமைதான்! .

No comments:
Post a Comment