எங்கள் குடும்பதிற்கு சாஸ்தா சுரண்டையில் உள்ள ஆதீனம் அழகிய அய்யனார் சுவாமி ! அந்த கோவில் சில வருடங்களுக்கு முன்புதான் கும்பாபிசேகம் நடந்தது. பொதுவாகவே அய்யனார் கோவில்கள் குளத்துக்கரை ஆற்றங்கரை ஆகிய இடங்களில் இருக்கும்.பாதை சரியாக இருக்காது! சுரண்டையிலும் அது போலத்தான் .வயல் வரப்பில் நடந்து செல்ல வேண்டும் .அல்லது குளத்து கரையில் செல்ல வேண்டும் .குளத்து கரையில் சில சமயம் காரில் அல்லது டூவீலரில் செல்லலாம் .மழை காலத்தில் அப்படி செல்ல முடியாது .நடந்து போனாலும் கால் வழுக்கும் ..பங்குனி உத்திரத்தன்று பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள் .எல்லா வகுப்பினரும் வருவார்கள் .அய்யனார் சைவமாக இருந்தாலும் அந்த கோவிலில் முன் பக்கம் உள்ள மாடதேவதைகளுக்கு ஆடு கோழி வெட்டி பலி கொடுப்பார்கள் .அது சைவமான பக்தர்களுக்கு சங்கடமாக இருக்கும் .
ஒரே பூசாரிதான்.அன்று கூட்டம் நிறைய வரும்போது அவர் மிகவும் கஷ்ட படுவார் .அன்றைக்காவது உதவிக்கு இரண்டு பேரை உதவிக்கு வைத்து கொள்ளலாம் !
அந்த பூசாரி பிள்ளைமார் இனத்தை சேர்ந்தவர் .மந்திரம் தெரியாது .எல்லோருடைய பிரசாதங்களையும் மொத்தமாக வைத்து தீபாராதனை காட்டி விடுவார்.
பொதுவாக பூசாரி எந்த வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அந்தந்த தெய்வங்களுக்கு உரிய மந்திரங்களை தமிழில் மனப்பாடம் செய்து வைத்து கொள்ள வேண்டும் .அந்த மந்திரங்களை சொல்லும்போதுதான் பக்தர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் .வெறுமனே தீபாராதனை காட்டினால் என்ன பயன் ,.
இனியாவது அவர் மந்திரங்களை கற்று கொள்ள வேண்டும் .
எனது அம்மாவின் அப்பா
அதாவது என் அம்மா தாத்தா வரும்போது கையில் குடை கொண்டு வருவாராம் பங்குனி மாதம் வெய்யில் அடிக்கும் ஆனாலும் தாத்தா மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் குடை கொண்டு வருவார் ..பலரும் கேலி பேசுவர் .அவர் கவலைப் படமாட்டார் .ஆனால் அந்த காலத்தில் பூஜை முடிந்ததும் மழை பெய்யுமாம் .எல்லோரும் தாத்தாவை போற்றுவார்களாம் .ஆனால் இப்போது எல்லாம் மாறாக இருக்கிறது .ஆனாலும் நாம் எப்போதும் போல நம்பிக்கையை கை விடாமல் இருப்போம்!

No comments:
Post a Comment