நீங்களும் ஜாக்கிரதையாக இருங்கள் !
தினசரி சமைக்க வேண்டும் என்று கண்டு பிடித்தவனை அவன் கழுத்தை
பிடித்து திருக வேண்டும் என்று தேடிக்கொண்டிருப்பவள் !பிரிட்ஜை கண்டு பிடித்தவன்தான் அவளுக்கு குல தெய்வம் !ஒரு நாளைக்கு சமைத்து மூன்று நாளைக்கு வைத்துக்கொள்வாள் ! நண்பருக்கு ஓட்டல் சாப்பாடு ஒத்துக்கொள்ளவில்லை ! சுகரிலிருந்து எல்லா வியாதியும் அவர் உடம்பில் வாடகை கொடுக்காமல் நிரந்தரமாக தங்க ஆரம்பித்தது !
!
\அவள் கணவனை கவனிக்கிறாள் அல்லது கவனிக்காமல் போகிறாள்!அதை பற்றி கவலை இல்லை !ஆனால் உறவினர் வீடுகளில் வந்து கலகமூட்டினால்
கவலை வரத்தானே செய்யும் .பத்து ஏழரையும் சரி அவள் ஒரு ஆளும் சரி !கலகமூட்டுவதே தெரியாத படி பேசி குடும்பத்தை குலைத்து விடுவாள் !
எப்படி என்கிறீர்களா? உங்கள் வீட்டுக்கு வருகிறாள் என்று வைத்துக்கொள்ளுங்எப்கள் ! உங்கள் மகன் காலேஜில் படிக்கிறான் அல்லது பெரிய பையனாக இருக்கிறான் ! நீங்கள் இருக்கும்போதே அவனிடம் பேசுவாள் ! பையன் எப்படி வளர்ந்துட்டான் ! சினிமா ஸ்டார் மாதிரி இருக்கனே ! சூர்யா மாதிரி இருக்கானே !விஜய் மாதிரி இருக்கானே ! இவனை பெண்கள் கொத்திக்கொண்டு போய் விடுவார்களே ! யாராவது பெண்கள் உன்னை காதலிச்சு இருக்காங்களா ? காதலிச்சி இருப்பாங்க ! நீ என்ன செய்வ !நல்ல பையன் !ஆனா மன்மதன் மாதிரி இருக்கியே ! கடவுள் அப்படி படைச்சுட்டாரே ! நீ சும்மா இருந்தாலும் பெண்கள் உன்னை விட மாட்டார்களே ! என்னமோ அப்பா ஜாக்கிரதையா இரு என்று இவனை உசத்தி
பேசுவது போல் பேசி விட்டு போய் விடுவாள் ! அது வரை நல்ல பையனாக இருந்தவனை இவள் பேச்சு ஒரு வழி பண்ணி விடும் ! உண்மையிலேயே நாம் சினிமா ஸ்டார் மாதிரித்தான் இருக்கிறோமோ ! நாம் தான் இதுவரை தெரியாமல் இருந்து விட்டோமோ ? பெண்கள் நம்மை காதலித்திருப்பார்களோ நாம் தான் கண்டுக்காமல் இருந்து விட்டோமோ ? என்று அவன் மனம் அலை பாயும் ! படிப்பில் கவனம் குறையும் !நீங்கள் இதை கவனிக்காமல் விட்டு விட்டீர்கள் என்றால் ஒரு நாள் ஒரு பெண்ணை இழுத்துக்கொண்டு ஓடியும் போய் விடுவான் ! அதன் பிறகு அவன் வாழ்க்கை அதோ கதிதான் !ஏன் உங்கள் குடும்பமும் அதோ கதிதானே !
இதே போல பெண்கள் இருக்கிறார்கள் என்று வைத்துகொள்ளுங்கள்!அவளிடமும் இதே போல நீ ஐஸ்வர்யாராய் போல இருக்கிறாய் அனுஷ்கா போல இருக்கிறாய் என்று கூறி அவள் மனதையும் கெடுத்து விஷ விதையை விதைத்து விடுவாள் !
வளர்ந்த பிள்ளைகள் இல்லை என்றால் அவளுக்கு கவலை இல்லை .கணவன் மனைவி இருக்கும் வீடாக பார்த்து போய் பேசுவாள்! .என்ன வீட்டில் வேலைகள் முடிந்து விட்டதா ! அவர் ஆபிசுக்கு போய் விட்டாரா ! நீயும் லட்சனமாக இருக்கிறாய் அவரும் லட்சணமாக இருக்கிறார் .அதில தான் சிக்கலே இருக்கு !அவர் ஆபிசுலே பத்து பதினைந்து பெண்கள் வேலை பார்கிறார்கள் !இவர் சும்மா இருந்தாலும் அவர்கள் சும்மா இருக்கணுமே ! நீ ஜாக்கிரதையா இருக்கணும் ! அவர் யார் கூடவாவது பழக்கம் வச்சு இருக்காரானு விசாரிக்கணும் !சும்மா ஜடம் மாதிரி இருந்தேனா பின்னால் உன் வாழ்க்கை மோசம் போயிடும் ! தும்பை விட்டுட்டு வாலை பிடுச்ச கதையா போயிறக்கூடாது ! என்று விஷ விதையை விதைத்து விடுவாள் .அது நன்றாக வேலை செய்யும் !அவன் ஆபிசில் இருந்து தற்செயலாக லேட்டா வருவான் !இவள் ஏன் இவ்வளவு லேட்டு எவ கூட போய்ட்டு வா்றீங்க என்பாள் அது படிப்படியாக வளர்ந்து சண்டையாகி பேச்சு வார்த்தை நின்னு பிரிவினை வரை கொண்டு வந்து விடும் ! இதில் நமது கதாநாயகிக்கு என்ன லாபம் என்கிறீர்களா ! அவளுக்கு அது டைம் பாஸ் !அடுத்தவர்கள் சந்தோசமாக இருக்க கூடாது என்பதுதான் அவளது உயர்ந்த லட்சியம்!
உங்கள் வீட்டுக்கு அவள் வந்தாலும் வரலாம் !ஜாக்கிரதையாக இருங்கள் !.

No comments:
Post a Comment