Tuesday, 23 January 2018

தொழில் தர்மம்,!

சிகி சிவம் அவர்கள்  பேச்சில் கேட்ட ஒரு கதை!
,###########################
அந்த ஊரில் விலை மாது ஒருத்தி வசித்து வந்தாள். அவள் விலை மாதாக இருந்தாலும் அதிலும் நேர்மை, தர்மம் இவைகளை கடைப் பிடித்து வந்தாள்.
காலையில் எழுந்து குளித்து முடித்து கதவை திறக்கும் போது யார் வெற்றிலை பாக்கோடு காசு வைத்திருக்கிறாரோ அவருடன் அன்று இரவு அவரை கணவராக ஏற்றுக் கொள்வாள்.
அன்று காலை கதவை திறக்கும் போது ஒரு வயதான கிழவர் வெற்றிலை பாக்கோடு காசும் வைத்திருந்தார் . அவள்அவரிடம் ஐயா, இன்று இரவு  உங்களை கணவராக ஏற்று உங்களுடன் கழிக்க சம்மதிக்கிறேன். இரவு வாருங்கள் என்று கூறி அனுப்பி வைத்தாள்.
சிறிது நேரம் கழித்து அந்த நாட்டு மன்னன் வந்து இன்று இரவு உன்னுடன் கழிக்க நான் விரும்புகிறேன். அதற்கு எவ்வளவு பொன் பொருள் வேண்டுமோ கேள் தருகிறேன் என்றார்.
அதற்கு அவள் மன்னா! இன்று இரவு ஒரு வயோதிகருடன்  இருப்பதற்கு சம்மதித்து விட்டேன். அதை நான் மீற மாட்டேன். அது தர்மமும் அல்ல. அதனால் உங்கள் வேண்டுகொளை என்னால்   ஏற்க இயலாது என்று கூறினாள். மன்னருக்கு கோபம் வந்து விட்டது. எவ்வளவு காசு வேண்டுமானாலும் கேள். தங்கம்,வெள்ளி எது வேண்டுமானாலும் கேள் தருகிறேன். ஆனால் என்னை மறுக்கக் கூடாது. மறுத்தால் உன் உயிர் உன் உடலில் இருக்காது என்றார்.
அதற்கு அவள் மன்னா! நான் தொழிலில் விலைமாதாக இருக்கலாம். ஆனால் அதிலும் தர்மம், நேர்மை இவைகளை கடை பிடிப்பவள்.அதை மீற மாட்டேன்.நீங்கள் என்னை கொன்றாலும் பரவாயில்லை  என்று கூறினாள். மன்னன் கோபத்துடன் சென்று விட்டான்.
அன்று இரவு வயோதிகர் வந்தார். அவர் அவள் உடலை தொடவில்லை. ஆனால் அன்று இரவு முழுவதும் அந்த அறையில் மல ஜலம் கழித்து கொண்டே இருந்தார்.
அவள் சிறிதும் முகம் சுழிக்காது அவைகளை அப்புறப்படுத்தி , துப்புறவு செய்து அவரை வெண்ணீரில் துணியை நனைத்து துடைத்து விட்டு,வேண்டிய  பணிவிடைகள் செய்தாள்.
விடிந்தது.வயோதிகர் அவளை அழைத்து அம்மா ! உனக்கு நான் மிகவும் கஷ்டத்தை கொடுத்து விட்டேன். அதோடு மன்னரின்கோபத்திற்கும் ஆளாகி விட்டாய்.எல்லாவற்றிற்கும் நான் காரணமாகி விட்டேனே என்றார்.
ஐயா! இன்று இரவு உங்களை கணவராக ஏற்றுக் கொள்ள சம்மதித்தேன் . அதனால் அந்த பணிவிடைகளை நான் செய்தேன்.அது என்னுடைய கடமை .என்னுடைய தொழில் தர்மமும் அதுதான் .அதனால் மன்னரின் கோபத்தை பற்றி நான்  கவலைப் படவில்லை என்றாள். உன் பெயர் என்னம்மா என்று கேட்டார். அவள் தும்பை என்பது எனது பெயர் என்றாள்.
அப்போது அந்த வயோதிகர் தனது ரூபத்தை காட்டினார். அவள் முன் சிவபெருமானாக  காட்சி அளித்தார்.
நேற்று இரவு பணிவிடை செய்தது சிவபெருமானுக்கு என்று தெரிந்ததும் அவள்  கண்களில் மாலை மாலையாக கண்ணீர் அருவியாக பொழிந்தது. அவளுக்கு என்ன சொல்வது, என்ன செய்வது என்று  தெரியவில்லை.அழுதாள்,தொழுதாள்.விழுந்தாள் எழுந்தாள்.
சிவன் அவளிடம் உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் தருகிறேன் என்றார். அப்படி கேட்டதும் அவள் அவசரத்தில் உங்கள் பாதம் என் தலை மீது எப்பொழுதும் பட வேண்டும் என்பதற்கு பதிலாக் உங்கள் தலை மீது எப் பொழுதும் என் பாதம் பட வேண்டும் என்று கேட்டு விட்டாள். சிவபெருமான் சிரித்தார். அப்போதுதான் இவளுக்கு தன் தவறு புரிந்தது. உடனே இறைவா என்னை மன்னித்து விடு.நான் மாற்றி சொல்லி விட்டேன். எப்போதும் உன் பாதம் என் தலை மீது இருக்க வேண்டும் என்றாள். அதற்கு சிவபெருமானோ அம்மா தும்பை ! நான் வரம் கொடுத்து விட்டால் அதை மாற்ற முடியாது.
இனி எப்போதும் என் தலையில் தும்பை மலர் வீற்றிருக்கும் என்றார். அதனால்தான் தும்பை மலர் தூய்மைக்கு உதாரணமாக இன்றளவும் விளங்குகிறது.
நல்லது எதை படித்தாலும் ,கேட்டாலும் அதை  என் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது என் பழக்கம். அதுபோல் இந்தக் கதையையும் என் நண்பன் ஒருவனிடம் சொன்னேன்.
உடனே அவன் ஒரு விலை மாதே தன் தொழிலில் இவ்வளவு நேர்மையும் தர்மத்தையும் கடைப் பிடிக்கிறாள்  என்றால் நம் அதிகாரிகளும், அரசும் எவ்வளவு நேர்மையையும்  தர்மத்தையும் கடைப் பிடிக்க வேண்டும் ? என்று கேட்டான்.
இதற்கு என்ன பதில் சொல்வது?
அவரவர் செய்யும் தொழிலில் நேர்மையையும் தர்மத்தையும் கடை பிடித்தால் வீடும்,நாடும் சிறந்து விளங்கும்!

2 comments:

  1. Borgata Hotel Casino & Spa, Atlantic City - Dr.MD
    The 의정부 출장안마 Borgata Hotel Casino & Spa is the flagship property of the Borgata brand and 제주 출장마사지 will have a casual atmosphere that 광주광역 출장안마 is Address: 김해 출장샵 1 Borgata Way, Atlantic 전라남도 출장안마 City, NJ

    ReplyDelete