இந்தப் படத்தைப் பார்த்ததும் உங்களுக்கு பழைய கதை ஏதும் ஞாபகத்திற்கு வருதா !வரலையா !சரி ! பரவாயில்லை ! நானே சொல்றேன் ! ஒரு முனிவர்
ஆற்றில் நீராடச் சென்றார் ! அப்போது தன் கையில் உள்ள கமண்டலத்தை ஆற்று மணலில் வைத்து அடையாளம் தெரிவதற்காக மணலை குவித்து மூடி வைத்து விட்டு குளிக்க சென்றார் ! முனிவர் குளித்து விட்டு திரும்பி வந்து பார்த்தால் ஆற்று மணல் பரப்பு முழுவதும் மணல் குவியலாக தெரிந்தது ! இவர் கமண்டலம் எது என்று கண்டு பிடிக்க முடியவில்லை ! காரணம் ஆற்றில் குளிக்க வந்த அனைவரும் தாம் கொண்டு வந்த பொருளை மணலால் மூடி வைப்பதுதான் ஐதீகம் என்று எண்ணி எல்லோரும் மணலால் மூடி வைத்து விட்டு குளிக்க சென்றனர் ! ஒருவாறு முனிவர் தனது கமண்டலத்தை கண்டுபிடித்து எடுத்துக்கொண்டார் ! மனிதர்களின் அறியாமையை ,மூட நம்பிக்கையை எண்ணி வருத்தமுற்றார் !
அந்த காலத்தில் இருந்தே நம்மிடம் ஒரு பழக்கம் இருந்து வருகிறது ! ஒருவர் பழக்கடை வைத்து லாபம் பார்த்தால் பல பேர் பழக்கடையாக வைப்பார்கள் !சுவீட் ஸ்டால் வைத்து ஒருவர் நன்றாக ஓடினால் பலரும் சுவீட் ஸ்டாலாக வைப்பது வழக்கம் ! வேறு வியாபாரம் செய்து சம்பாதிப்பது என்ற எண்ணமே வருவதில்லை !
என் நண்பர் ஒருவர் ரொம்ப சுத்தம் பார்ப்பார் ! காபி கடைக்குப் போனால் எல்லோரும் தம்ளரில் எச்சில் பண்ணி குடிக்கிறார்கள் என்று இவர் வட்டகையில் காபி குடிப்பார் ! ஒருநாள் இவர் வட்டகையில் காபி குடித்து விட்டு பார்த்தால் எல்லோருமே வட்டகையில் காபி குடித்துக் கொண்டிருப்பதைக் கண்டார் !இந்த ஜனங்களை மாற்றவே முடியாது என்று எண்ணி தலையில் அடித்துக் கொண்டார் !
உலகில் மாறாதது மாற்றம் ஓன்று மட்டுமே ! அதிலும் நம் ஜனங்கள் அடுத்தவர்களை பார்த்து காப்பி அடிக்கும் பழக்கம் என்றுமே மாறாது !



No comments:
Post a Comment