நான் சாப்பாட்டில ருசி எல்லாம் பாக்கமாட்டேங்க! ஆனா சுத்தமா இருக்கணும்! சுத்தம்தானுங்க மனுஷனுக்கு முக்கியம்!முதல் மரியாதை படத்துல சிவாஜி கணேசன் மனைவி செய்யுற காரியத்தை பார்த்தா யாருக்காவது சாப்பிட தோனுமா? சில வருடங்களுக்கு முன்னால ஒரு கடையில சாப்பிட போனேன்! தோசைக்கு ஆர்டர் கொடுத்தேன்! எப்போதும் சாதா தோசைதான் சாப்பிடுவேன்!ஸ்பெஷல் தோசை என்றால் கண்ட கண்ட எண்ணெயை விட்டு வயித்தை ஒரு வழி பண்ணிடுவாங்க! அந்த எண்ணையில சனி பகவான் ஒளிஞ்சிருப்பாறு! டாக்டர்கிட்ட திட்டு வேறு வாங்கணும்! ஆகவே சாதா தோசைக்குகாத்திருந்தேன்!சர்வருக்கு வயது 50 இருக்கும்!
அவர் ஒரு ஸ்டூலில் உக்கார்ந்தார்! சுவாரசியமா மடியில இருந்த பொடி டப்பாவை எடுத்தார்! வலது கை இரண்டு விரலால எடுத்தார்! இரண்டு கண்ணையும் மூடி உலகத்தை மறந்து இரண்டு மூக்கு துவாரத்திலும் பீரங்கியில் வெடி மருந்தை செலுத்துவதைப் போல செலுத்தினார்!அப்படியே ஆனந்த மயக்கத்தில் ஆழ்ந்து விட்டார்!
இவ்வளுவையும் நான் பார்த்துக்கிட்டேஇருந்தேன்!என்னதான் நடக்குதுன்னு பார்ப்போம் என்று!
தோசை ரெடி என்று உள்ளே இருந்து சததம் வந்தது! சர்வர் ஆனந்த மயக்கத்தில் இருந்து விடுபட்டு எழுந்தார்! தோசையை வாங்கினார்! பொடி போட்ட அதே கையால எடுத்து எனக்கு வைத்தார்! அதன் பிறகுதான் என் வேலையை காட்டினேன்! இதுவரை என்ன செய்து கொண்டிருந்தீர் என்று கேட்டேன்!நடந்ததை சொன்னார்!
பொடி போட்டது சரிதான்!ஆனால் கையை கழுவிநீரா ?முதலாளியை கூப்பிடும் என்றேன்!அவ்வளவுதான் மனிதர் என் காலை பிடிக்க ஆரம்பித்து விட்டார்!நான் அவரை தடுத்து சுத்தத்தை எடுத்து கூறி என் கண்ணு முனனாலே கையை கழுவச்சொல்லி வேறு தோசை கொண்டு வரச்சொல்லி சாப்பிட்டேன்!
வேறு ஒரு கடையில் நடந்ததை நாளைக்கு சொல்லுகிறேன்!

No comments:
Post a Comment