பயணீயரும் நடத்துனரும்
நாளிதழ் ஒன்றில் ஒரு செய்தி படித்தேன்! ஒருவர் திருநெல்வேலி புது பஸ் நிலையத்தில் நாகர்கோவில் செல்லும் இடை நில்லா பேரூந்தில் காலை 8 மணிக்கு வள்ளியூர் செல்ல ஏறி இருக்கிறார்.டிக்கெட்25 ரூபாய்.இவர் நூறு ரூபாய் கொடுத்திருக்கிறார். நடத்துனர் 25 ரூபாய் மாற்றிக் கொண்டு வர்ச்சொல்லி டிக்கட் தர மறுத்து விட்டார்.ஆனால் அந்த பஸ்ஸில் கூட்டமும் இல்லை.மற்ற பஸ்ஸில் உள்ள நடத்துனர்கள் வள்ளியூர், நாகர்கோவில் என்று சப்தம் போட்டு அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அரசாங்க பஸ் என்கிறதாலே ஆள் ஏறினாலும் ஏறாவிட்டாலும் நடத்துனருக்கு கவலை இல்லை !தனியார் பஸ் என்றால் விடுவார்களா ? அன்பரோ வயதானவர்.காலையில் நடந்த இந்த நிகழ்வால் அவர் மிகவும் நொந்து போய் விட்டார் !
இதில் நதி மூலம் ஆராய முனைந்தால் அனுமார் வால் போல் நீண்டு கொண்டே போகும் !.நாம் அதைச் செய்யப்போவதில்லை. ஆனால் பிரயாணத்திற்கு முன் நாம் செய்ய வேண்டியது என்ன என்று ஆலோசிக்கலாம்.அதுவோ இடைநில்லா பேரூந்து! டயர் பங்சரானால் அல்லது பஸ் ரிப்பேர் ஆனால் அல்லது அவர்களுக்கு வேண்டியவர்கள் இறங்க வேண்டியிருந்தால் தவிற இடை நிற்காது!அல்லது அவுட்டரில் இறங்க வேண்டும்.இது மிகவும் கஷ்டமானது.நான் ஒரு நாள் வள்ளியூரில் காலை டிபன் சாப்பிடலாம் என்று எண்ணி புறப்பட்டோம்.4 way ஆனதினால் கார் ஓவர் பிரிட்ஜ் தாண்டி காவல்கிணறு போய் விட்டது.திரும்ப வள்ளியூர் வந்து சாப்பிட்டு விட்டு சென்றோம்.நான்கு வழி சாலை ஆவதற்கு முன்னால் இருந்த கடைகள் மரங்கள் எல்லாம் மறைந்து போய் விட்ட காரணத்தினால் எந்த ஊர் என்று கண்டு பிடிக்க முடியவில்லை!
கயத்தாறில் இறங்க வேண்டியவரை பாலத்தை கடந்து சில கிலோமீட்டர் தாண்டி இறக்கி விட்டு சுகரை குறைக்க நடை பயணம் செய்ய வைத்த சம்பவங்களும் உண்டு.
எனவே இடைப்பட்ட ஊரில் இறங்க வேண்டியவர்கள் லோக்கல் பஸ்சில் செல்வது நலம்!.மதுரைக்கு செல்லும் பைபாஸ் ரைடரில் ஏறினோம் என்று வைத்துக் கொள்ளுங்கள் .நாம் கோவில்பட்டியிலோ அல்லது சாத்தூரிலோ இறங்கினால் மதுரை செல்பவர்கள் நம்மை பார்க்கும் பார்வை இருக்கிறதே வேற்று கிரக ஜீவராசிகளைப்போல நம்மை பார்ப்பார்கள்!.அதனால் அவர்களை பார்க்காது போல நாம் இறங்கிவிட வேண்டும் .நாமும் அவர்களை அயல் நாட்டு மனிதர்களைப்போல பார்க்க வேண்டும் .
அடுத்ததாக பயணத்திற்கு முதல் நாளே சில்லரை யாக பத்து ஐம்பது என்று மாற்றி வைத்துக்கொள்ள வேண்டும் ..ஒருமுறை நான் முன் சீட்டில் இருந்தேன் .காற்று வரட்டும் என்று சட்டை காலரை நன்றாக தூக்கிவிட்டு சீட்டில் சாய்ந்திருந்தேன்.என் பின் சீட்டில் இருந்த பெண்ணுக்கு வாமிட் வந்து விட்டது போலும் .எழுந்தவள் என் சட்டை காலருக்குள் வாமிட் எடுத்து விட்டாள்.முதுகு பூரா வாமிட்தான்!.பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் எழுந்து தீண்டத்தகாதவன் மாதிரிஎனக்கு தனி சீட் கொடுத்து விட்டார்கள் ..திருமண வீட்டிற்கு செல்ல வேண்டியவன் அதற்கு போகாமல் லாட்ஜில் ரூம் போட்டு தங்கி சாண்டல் சோப்பு வாங்கி குளித்து புது சட்டை வாங்கி போட்டு சென்ட் வாங்கி தெளித்து ஊர் வந்து சேர்ந்தேன் ! .ஊருக்கு போனவன் குளித்து முடித்து புதுச்சட்டையோடு செண்ட்மணக்க வந்ததனால் என் துணைவியாரின் சந்தேகத்தை போக்க ஒரு வாரமாச்சு !
அதனால வாமிட் எடுக்கிறவங்க பஸ்ஸில போகும்போது அதுக்கு தகுந்த மாத்திரை களோடு வரணும்! அதோடு கையிலே வாமிட் வந்தவுடன் எடுக்க வசதியாக ஒரு பையை கொண்டு வரணும் !.அடுத்தவங்க வாழ்க்கையோடு விளையாடக்கூடாது !
பிரயாணம் செய்வதற்கு முன்னேற்பாடு பற்றி பாரதிதாசன் ஒரு பாட்டு எழுதி இருக்கார்.
சீப்புக்கண்ணாடி ஆடை சிறுகத்தி கூந்தல் எண்ணெய்
சோப்பு பாட்டரி விளக்கு தூக்குக்கூஜா தாள் பென்சில்
தீப்பெட்டி கவிகை சால்வை செருப்பு கோவணம் படுக்கை
காப்பிட்டபெட்டி ரூபாய் கைக்கொள்க யாத்திரைக்கே .
படிக்க நன்றாகத்தான் இருக்கிறது ! செயல் படுத்துவதிதான் கஷ்டமாக இருக்கிறது !
.jpg)
.jpg)

No comments:
Post a Comment